துப்பாக்கி படம் இஸ்லாமியத்திற்கு எதிராக உள்ளதா

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் துப்பாக்கி தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் இஸ்லாமியத்திற்கு எதிராகவும், இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போலவும் சித்தரிக்கபட்டுள்ளதாக சில கருத்துக்கள் எழுந்துள்ளது. சில இஸ்லாமி அமைப்புகள் விஜய் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாகவும் சில செய்திகள் வருகின்றது..

அப்படி என்ன இஸ்லாமியர்
களை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பார்ப்போம். பொதுவாக இந்தியத் திரைப்படங்கள் என்றாலே அந்த திரைப்படத்தில் தீவிரவாதி போன்ற கதாபாத்திரம் வந்தால் அதற்கு சரியான தேர்வாக ஒரு இஸ்லாமிரை காட்டுவது என்பது இத்தனை ஆண்டுகள் நீடித்து வருகிறது. அதுவும் தமிழ் படம்என்றால் தீவிரவாதியானவன் கண்டிப்பாக தீவிர இஸ்லாமியனாகத்தான் இருக்க வேண்டும் என்ற பார்முலாலை தமிழ் திரைவுலகம் கடைபிடித்து வருகிறது.
தமிழ் படத்திற்கு உள்ள பார்முலாபடி துப்பாக்கி படத்தில் தீவிரவாதிகள் என்றால் அது இஸ்லாமியர்களைத்தான் காட்டவேண்டும் என்று முடிவு செய்து படத்தில் வரும் அத்தனை தீவிரவாதிகளும் இஸ்லாமியர்கள் போல் காட்டப்பட்டுள்ளது. அவர்களை கொண்று நாட்டுக்கு ஏற்படும் தீமையை கதாநாயகன் போக்குவது போன்று படம் உள்ளது.

இந்த உலகிற்கு, மனித சமூகத்திற்கு, அடுத்த உயிருக்கு தீங்கு விளைவிக்கும் செயல் செய்தால் அது யாராக இருந்தாலும் தீவிரவாதியே ஆனால் உலகம் ஒரு சில சம்பவங்களை வைத்துக்கொண்டு தீவிரவாதிகள் என்றால் அது இஸ்லாமிய இனம்தான் என்ற முடிவுக்கு வருவது கொஞ்சம் அதிகப்படியாகத்தான் தெரிகிறது.

இந்தியாவில் பெரும்பாலன இஸ்லாமிய மக்கள் வாழ்கிறார்கள். அந்த இனத்தையே தீவிரவாதிகள் போல் காட்டுவது அனைவரையும் நாம் இழிவு படுத்துவதுபோல்தான் ஆகும். இஸ்லாமியத்தில் தீவிரவாத கருத்துடைய சிலர் இருக்கிறார்கள் என்றால் தான் வாழும் நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற நாட்டுப்ற்றும் அவர்களில் இருக்கத்தான் செய்கிறது. இந்தியாவுக்கா பாடும் இஸ்லாமிய இன இளைஞர்கள் இங்கு ஏராளம்.

கமல்ஹாசன் இயக்கத்தில் வெளிவந்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் கூட தீரவாதிகள் நால்வரில் ஒருவர் இந்துவாக காட்டியிருப்பார்கள். அவர்களை அழிக்கும் போலீஸ் அதிகாரிகளில் ஒருவராக ஹாரீப் என்ற ஒரு முஸ்லீம் இருப்பார். அதனால் அந்தப்படம் பொதுமைபடுத்தி காட்டப்பட்டிருந்தது.

பொதுவாக ஒரு குறிப்பிட்ட இனத்தையோ, ஒரு சமூகத்தையோ, ஒரு குழுவையோ தவறாக குறிப்பிடுவது என்பது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. இனிவரும் இந்தியதிரைப்படங்கள் அதுபோன்ற காட்சி அமைப்பை கொஞ்சம் குறைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும். அதுவும் ஒரு இடத்தில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து அதுபோன்ற படங்கள் தொடர்ந்து எடுக்கும்போது அந்த சம்பவம் இன்னும் தன்னுடைய வடுக்களை மறக்காமல் துன்பத்திலே நீடிக்கவைக்கிற செயலாகத்தான் அது தெரிகிறது. குண்டு வெடிப்பு என்றால் மும்பை என்பது அதனுடைய மற்ற புகழ்களை மறைக்க வைப்பது போல் உள்ளது.

Post a Comment

0 Comments