தஞ்சை மாவட்டத்துக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை....

தஞ்சை மாவட்டத்துக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை....
நேற்று முதல் தொடர்ந்து முன்றுவது நாளாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை....
அந்தமான் அருகே கடந்த, 26ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது.
இது புயலாக மாறி, கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. வங்கக்கடலில் மையம்
கொண்டிருக்கும் புயல் நாகை, சென்னை இடையே, இன்று கரையை கடக்கிறது. இதனால்,
தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என,
வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதனால்,
புதுச்சேரி மற்றும் தமிழகத்திலுள்ள நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில்
முன்னெச்சரிக்கையாக, நேற்று முன்தினம் இரவு அனைத்து பள்ளிகளுக்கும்
விடுமுறை அறிவித்து, சம்பந்தப்பட்ட கலெக்டர்கள் அறிவித்தனர்.

திடீர் விடுமுறை அறிவிப்பு: 
இன்றும் (31ம் தேதி) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் அறிவிப்பு வெளியாகும் என,
பெற்றோர் நேற்று எதிர்பார்த்து, டி.வி., முன்பு காத்திருந்தனர்.
இந்நிலையில் மாலை, 6.30 மணியளவில் தஞ்சை மாவட்டத்திலுள்ள அனைத்து
பள்ளிகளுக்கும் விடுமுறையை கலெக்டர் பாஸ்கரன் திடீரென அறிவித்து,
மாணவர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.திருவாரூருக்கு தொடரும்
லீவ்: கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை
விடப்பட்டது. இந்நிலையில் புயல் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று
வானிலை ஆய்வு அறிவித்துள்ளதால், இன்றும் திருவாரூர் மாவட்ட பள்ளி,
கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால், ஐயாயிரம்
ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில்
மூழ்கியுள்ளன என விவசாயிகள் கூறினர்.

Post a Comment

0 Comments