நன்றே செய்யுங்கள்-அதை இன்றே செய்யுங்கள் -கே.எம்.கே.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு கிளைக்கு சிங்காரச் சென்னையில் ஒரு பிரதானமான இடத்தில் வருவாய் தரக்கூடிய அசையாச் சொத்தை உருவாக்குவதன் கட்டாயத்தை உணர்ந்து அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளோம்.

இதுபற்றிய விவரங்கள் யாவும் மணிச்சுடரில் தொடர்ந்து விவரிக்கப்பட்டு வருகின்றன. கட்டட நிதி கேட்டு கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.IUML TAMILNDU BUILDING FUND A/c.No.6051059643, Indian Bank Harbour Branch, Chennai - 600 001 என்று கணக்கும் துவக்கப்பட்டிருக்கிறது.

.IUML தமிழ்நாடு கட்டட நிதிக்கு நன்கொடை வழங்கும் நல்லுள்ளங்களின் பட்டியல் இனி தொடர்ந்து வெளிவரவிருக் கிறது. அந்தப் பட்டியல் அனுதினமும் மணிச்சுடரில் பிரசுரமாகும் என்னும் நம்பிக்கை அதிகமாகவே இருக்கிறது.

எந்தத் தொகையும் இருகரமேந்தி ஏற்பதற்கு உரியதே ஆகும். தொகை பெரிதா? தொகை சிறிதா? என்பதை லீகர்கள் எப்பொழுதும் பார்க்கும் பழக்கமில்லை. அந்தத் தொகைக்குள் உள்ளுறையாக இருக்கும் உதவும் எண்ணமே மிக மிக முக்கியமானதாகும்.

இயக்கப்பணிக்கு இயல்பாகவே உதவிடும் இனிய இதயங்கள் ஏராளம் உள்ளன என்பதாலேயே 24-07-2012-ல் எழுதியுள்ள கட்டுரையில் இவ்வாறு எழுதப் பெற்றுள்ளது.

`இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாற்றில் எத்துணையோ வரலாறு படைத்துள்ள நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகக்குழு, செயற்குழு, பொதுக்குழு கூட்டங் களில் முடிவு செய்யப்படும்; பணி துவங்கும்; மணி (நிதி) வந்து குவியும்; இலட்சியம் நிறைவேறி விடும். இதுதான் `இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாரம்பரியம். அந்தப் பாரம்பரியப் போக்கிலும், நோக்கிலும் தமிழக `இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சமுதாய மேம்பாட்டுக்கு இயக்கத்தை வலிமைப் படுத்திட நிதி ஆதாரங்களைப் பெருக்கிடுவது ஒன்றே அடிப்படையான பணி என்று தீர்மானித்து இறைவன் மீது பாரத்தைச் சுமத்தி களத்தில் இறங்கியிருக்கிறது.’’

களத்தில் இறங்கியுள்ளோரைக் கரைசேர வைக்க வேண்டிய கடமை கௌமுக்கு இருக்கிறது.

நேற்றைய தினம் ஓர் அமெரிக்க கிறிஸ்துவ பாதிரியார் - அவர் பெயர் ராபர்ட் ஹெச். ஸ்கல்லர் - கூறிய வாசகத்தைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது.

``If the ideas are good, cash will somehow flow to where it is needed’’ - நோக்கங்கள் நல்லவையாக இருக்குமானால், அவை நிறைவேற தேவைப்படும் பணம் எப்படியாவது வந்து குவிந்து விடும் -

இதைப் படித்தபோது, இ.யூ. முஸ்லிம் லீகின்செயல்பாடுகளில் அனுபவம் பெற்றுள்ளவர்களைப்போல, இந்த அமெரிக்க பாதிரியாரும் பட்டறிவைப் பெற்றிருக்கிறார் என்ற உணர்வே ஏற்பட்டது.

ஆமாம்! இ.யூ.மு.லீ.கைப்

¨ பலப்படுத்திடல்

¨ நலப்படுத்திடல்

¨ வளப்படுத்திடல்

¨ விரிவுபடுத்திடல்

¨ வியாபிக்கச் செய்திடல்

¨ முதலில் முஸ்லிம்களின் உள்ளங்களில் முகிழ்க்கச் செய்திடல் 

¨ அடுத்து நாட்டு மக்கள் அனைவர் இதயங்களிலும் இ.யூ. முஸ்லிம் லீகின் அவசியத்தை உணர்த்திடல்.

¨ இவற்றையெல்லாம் முறையாகவும், நிறைவாகவும், தொய்வில்லாமலும், தடையில்லாமலும், சிறப்பாகவும், சீராகவும், நேராகவும் எல்லோரும் வரவேற்றுப் போற்றுவதற்குரிய பேரும் புகழும் கிட்டும் வகையிலும் செயல்படுவதற்குரிய சாதனங்கள் வேண்டும்! அவை உங்கள் மூலமே அவசியம் வந்தாக வேண்டும்! அதற்குத்தான் நீங்கள் மனமுவந்து நிதி அதிகம் தந்தாக வேண்டும்!

நன்றே செய்யுங்கள்! அதை இன்றே செய்யுங்கள்!

Post a Comment

0 Comments