பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு!
எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!
‘காவிரி நதிநீர் பிரச்சினை’ என்பது தினந்தோறும் நமது காதுகளில் வந்து முட்டுகிற செய்தியாகிவிட்டது. நாளிதழ்களும், தொலைக்காட்சித் தகவல்களும் இந்தப் பிரச்சினையை தலைப்புச் செய்தியாகத் தருவது இப்போது வாடிக்கையாகிவிட்டது. காவிரி நதி நீரின் ஒரு பகுதியைத் தமிழ்நாட்டுக்குத் தர மறுக்கிற கர்நாடக மாநிலத்தின் பிடிவாதப் போக்கே இதற்குக் காரணம் என்பதும் பரவலாக எல்லா தரப்பு மக்களும் அறிந்த ஒன்று.
பாரத நாடு எனும் கம்பீர வார்த்தையால் நெஞ்சுயர்த்திச் சொல்கிறோம் நம் இந்திய நாட்டை. ‘‘நாம் அனைவரும் இந்தியர்’’ என்கிறோம் பெருமிதத்தோடு. ‘‘இந்தியாவின் ஒருமைப்பாடும் இறையாண்மையும் நமது உயிர் மூச்சு’’ எனச் சொல்லி நாட்டுப்பற்றை உயர்த்திக் காட்டுகிறோம். இந்த நாட்டை ஆளுகிற மத்திய அரசாக இருந்தாலும், நாட்டுக்குள் வியாபித்திருக்கும் மாநில அரசுகளாக இருந்தாலும் அமைச்சர்கள் எல்லோருமே சத்தியப் பிரமாணம் செய்து பொறுப்பேற்கிறபோது ‘‘இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டைக் காத்து நிற்பேன்’’ என்று நிற்கும் நிலையிலேயே சொல்லிவிட்டு பதவி நாற்காலிகளில் அமர்கிறார்கள். அமர்ந்த உடனேயே அந்த ஒருமைப்பாட்டு உணர்வு ஆழ்ந்துவிட்டதோ! தாழ்ந்துவிட்டதோ! என எண்ணுகிற அளவுக்கு அண்டை மாநிலமான கர்நாடகா தனது நிலைபாட்டைக் காட்டி வருவது பெரும் துரதிருஷ்டவசமானது.
நீரின்றி விவசாயமே நடைபெறாமல் வரண்ட பூமியாகக் காட்சியளிக்கும் தமிழ்நாட்டின் பல பகுதிகள் வறட்சியால் வெடித்துப் பிளவுற்ற மண்பாறைகளாகக் கிடக்கின்றன. இந்த வறட்சி நிலையைப் போக்க அபரிமிதமாகக் கிடைக்கும் காவிரி நதி நீரின் ஒரு பகுதியை கர்நாடக மாநிலம் தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து தர வேண்டும் என்று ஒரு நியதியை உருவாக்கி அறிவித்தது காவிரி நதி நீர் ஆணையம். இது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஜூன் 2, 1990ல் பாரதப் பிரதமர் மறைந்த வி.பி.சிங் அவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த ஆணையத்தையும் தாண்டி, 1997ல் காவிரி கண்காணிப்புக் குழுவும் உருவாக்கப்பட்டு இக்குழுவின் தீர்மானப்படி ஒரு குறிப்பிட்ட அளவு கர்நாடகா தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற முடிவும் ஏற்பட்டது. எல்லாம் இருந்தும் என்ன செய்ய? இந்தக் கண்காணிப்புக் குழு இப்போது தனது ஆய்வின்படி அறிவுறுத்திய குறைந்தபட்ச அளவான 9000 கனஅடி தண்ணீரைக்கூட தர முடியாது என அடம்பிடித்துவிட்டு, உச்ச நீதிமன்றம் தலையிட்டவுடன் தண்ணீரை விடுவதற்கு சம்மதித்தது; பிறகு அதனையும் திடீரென ஒரு நாள் நிறுத்தி உச்ச நீதிமன்றத்திற்கே தனது நிலைபாட்டை ஒரு கேள்விக் குறியாகக் காட்டியிருக்கிறது. மாநிலங்களுக்கிடையே நிலவுகிற நட்பு ரீதியான நடைமுறையைச் சங்கடத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது கர்நாடகா. உச்சநீதிமன்ற ஆணையையும் மீறியிருக்கிற இந்த நிலைக்கு கர்நாடகாவின் அடுத்த கட்ட காட்சி என்ன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கிடையில் தமிழ்நாட்டு விவசாயத்திற்குத் தண்ணீர் இல்லையே! என்ன செய்வது?
ஐரோப்பாவில் ஓடும் ஒரு நீண்ட நதி ‘டான்யூ’ என்பது. இந்த நதி வேறுபட்ட எட்டு நாடுகளைக் கடந்து செல்கிறது என்றாலும் அந்த நாடுகள் தண்ணீரின் தேவையை ஒருங்கிணைந்து பார்க்கின்றன; பகிர்ந்து கொள்கின்றன. எந்த நாட்டிற்கிடையேயும் மோதலும் இல்லை. பல நாடுகள் ஒரு கண் கொண்டு பார்க்கின்றன; இங்கே இந்தியா என்கிற ஒரு நாட்டுக்குள் நம்மவர்களுக்குள்ளேயே பல கோணங்களில் குடுமிப்பிடிச் சண்டை. ஜனநாயகத்தின் விளையாட்டு இப்படியும் கோலம் போடுகிறது.
தண்ணீர் பிரச்சினை ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டில் மின்வெட்டுக்குப் பஞ்சமே இல்லை. ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் மின்வெட்டு? என்பதைவிட எவ்வளவு நேரம் மின்சாரம் கிடைக்கும்? என்ற கேள்விதான் மிகைத்து நிற்கிறது. அந்த அளவுக்கு 15 மணி நேரத்தையும் தாண்டிய மின்வெட்டு தமிழகம் முழுவதும் பரவலாக்கப்பட்டுள்ளது. மக்களின் ஜீவாதார பிரச்சினையாகத் தண்ணீரும் மின்சாரமும் இப்போது கேள்விக் குறியாகிவிட்ட வேதனை தொடர்கிறது. நல்லவேளை காற்று கிடைப்பதில் அண்டை மாநிலத்தை நம்பியிருக்க வேண்டியதில்லை. அப்படி ஒரு நிலை இருக்குமேயானால் மக்கள் மூச்சு விடுவதும் கேள்விக்குறியாகிவிடும்.
‘பாருக்குள்ளே நல்ல நாடாம் நம் பாரத நாடு’; பாரதி சொன்னாராம்.
நல்ல நாடுதான். நல்ல நாடாக இருப்பதற்கு விடமாட்டோமே!
இந்த மின்வெட்டை பிரதானமாகச் சொல்லித்தான் 2011 தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. தி.மு.க.வின் தோல்விக்கு மிகப் பெரிய காரணமாகச் சொல்லப்பட்டது மின்வெட்டுதான். இங்கே ஓர் உண்மையை உரக்கச் சொல்லுவது நமது கடமை.
2001&2006க்கான அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை பற்றிய தொலைநோக்குச் சிந்தனை அறவே இல்லாமல் இருந்ததால் மின் உற்பத்திக்கான எந்தத் திட்டமும் அவர்களால் தொடங்கப்படவில்லை. ஒருவேளை தொடங்கப்பட்டிருந்தால் 2006&2011 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் மக்களின் மின்சார தேவை பூர்த்தி செய்யப்பட்டிருக்கும். இவர்களைப் போன்று இருந்துவிடக்கூடாது என்ற தொலைநோக்குப் பார்வையில் 2006 & 2011க்கான தி.மு.க. அரசு மின்உற்பத்திக்கான பல்வேறு திட்டங்களை உருவாக்கி, பணிகளை முடுக்கிவிட்டன. அந்தத் திட்டங்கள் எல்லாம் இப்போது இந்த ஆட்சியில் முடிவுற்று நிறைவுறும் தருவாயில் இருக்கின்றன.
2011 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த சமயத்தில் சன் தொலைக்காட்சியில் நேர்காணல் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருந்தார்கள். முடிவுகள் அ.தி.மு.க.விற்குச் சாதகமாக வந்து கொண்டிருந்த நேரத்தில்
‘‘தி.மு.க. கூட்டணியின் தோல்விக்குப் பிரதான காரணம் மின்வெட்டுதானே?’’ என்ற கேள்வி மிகவும் அழுத்தமாக வைக்கப்பட்டது. ‘‘இல்லை. தவறான பிரச்சாரத்தால் தி.மு.க. இப்போது பலியாகியிருக்கிறது. மின்வெட்டிற்குக் காரணம் ஆளும் தி.மு.க.வே என பலரும் நினைக்க வேண்டியதாகிவிட்டது. உண்மை அதுவல்ல. அ.தி.மு.க.வின் முந்தைய ஆட்சியின் பாராமுகமே இந்த மின்வெட்டுக்குக் காரணம் என்றும் இப்போது யார் ஆட்சிக்கு வந்தாலும் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட மின்உற்பத்தித் திட்டங்களால்தான் இந்த குறை நீங்கப் போகிறது என்றும் குறிப்பிட்டு திட்ட விபரங்களை விளக்கினேன். 1. எண்ணூர் அனல் மின்நிலைய இணைப்பு மூலமாக 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் 8.12.2006ல் ரூ.3,136 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு 2013 ஆகஸ்ட் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.
2. மேட்டூர் அனல் மின் நிலையம் மூலமாக 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் 2.5.2007ல் ரூ.3,100 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு 2013 டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.
3. வடசென்னை அனல்மின் நிலையம் மூலமாக 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் 26.6.2007ல் ரூ.2,475 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு 2014 பிப்ரவரி மாதத்தில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.
4. உடன்குடியில் ஙிபிணிலி மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணைந்த கூட்டுத் திட்டத்தின் மூலமாக 1600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் பணி 15.10.2007ல் ரூ.8,362 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு 2014 தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.
5. வடசென்னை அனல்மின் நிலையத்திலேயே மேலும் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் 14.7.2008ல் ரூ.2,475 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு 2014ல் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.
6. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளிலிருந்து 183 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் 14.12.2009ல் ரூ.1,126 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு 2014ல் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.
ஆக இத்தனை திட்டங்களும் தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டதால் தான் இப்போது அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முடிவுற்று பயன்பாட்டுக்கு வரவிருக்கின்றன. இதனையும் தாண்டி கூடங்குளம் அணுமின் நிலைய மின்உற்பத்தியும் தொடங்கப்பட்டுவிட்டால் இன்னும் சில மாதங்களில் தமிழகம் மின்சாரத்தில் தன்னிறைவு பெற்ற மாநிலமாகத் திகழ விருப்பதை யாரும் தடுத்திட முடியாது. புகழனைத்தும் அம்மாவின் ஆட்சிக்கே உரியது என துதிபாடப்படுவதும் ஒருபுறம் நடக்கப் போகிறது. ஆனாலும் இந்த மின்சார தன்னிறைவுக்கு அ.தி.மு.க. ஆட்சி எந்த வகையிலும் காரணம் அல்ல என்ற விழிப்புணர்வு மக்களிடையே உருவாக்கப்பட வேண்டும். இது வரவிருக்கிற 2014 நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கச் செய்யவும் வேண்டும். காரணம், தி.மு.க. ஆட்சியின் மின்உற்பத்தித் திட்டங்கள் பயன்பாட்டுக்கு வந்தவுடன் அந்த நற்பெயரை ஜெயலலிதா தட்டிச் செல்ல முயற்சிப்பார்.
வழக்கம்போல உண்மை நிலையை மறந்துவிட்டு மக்கள் மீண்டும் ஜெயலலிதாவிற்கு ‘ஜெ’ போடப் போகிறார்களா?
மக்களை இருளில் மூழ்கடித்த ஜெ.வுக்கு மீண்டும் சிவப்புக்கம்பளமா?
தொலைநோக்குப் பார்வை கொண்டு மின்சாரம் தர காரணமாயிருந்த தி.மு.க.வுக்குப் பச்சைக் கொடியா?
பச்சைக் கொடிதான் என்று தாய்ச்சபை முஸ்லிம் லீக் பளிச்சென்று சொல்லும்.
ஆனாலும், ஒட்டு மொத்த தமிழக மக்கள் அதையே அழுத்தமாகச் சொல்ல வேண்டும்; நியாயத்தை வெல்ல வேண்டும்.
இன்ஷா அல்லாஹ்.

0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........