செப். 4-ந் தேதி ‘மணிச்சுடர்’ நாளிதழ் வெள்ளி விழா: தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து ஏழு பஸ்களில் பங்கேற்பு

அக்டோபர் நான்காம் தேதி சென்னையில் நடைபெறும் மணிச்சுடர் நாளிதழ் இருபத்து ஐந்தாம் ஆண்டு வெள்ளி விழா வில் தஞ்சாவூர் மாவட்டத்தி லிருந்து ஏழு பஸ்களில் முஸ்லிம் லீக் நிர்வாகிகளும், மணிச்சுடர் வாசக வட்ட உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். 

தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் பி.எஸ். ஹமீது அறிவுரைப்படி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகர முஸ்லிம் லீக் சார்பில் ஒரு பஸ்ஸிலும், தஞ்சாவூர் நகர முஸ்லிம் லீக் சார்பில் ஒரு பஸ்ஸிலும், திருப்பந்துருத்தி நகர முஸ்லிம் லீக் சார்பில் ஒரு பஸ்ஸிலும் அய்யம்பேட்டை நகர முஸ்லிம் லீக் சார்பில் ஒரு பஸ்ஸிலும், வழுத்தூர் நகர முஸ்லிம் லீக் சார்பில் ஒரு பஸ்ஸிலும், ஆடுதுறை நகர முஸ்லிம் லீக் சார்பில் இரு பஸ்ஸிலும் ஆக ஏழு பஸ்களில் தொண்டர்கள் சென்னையை நோக்கி அணி வகுக்கின்றனர்.

அத்துடன் முஸ்லிம் லீக் தொண்டர்களும், வாசகர் வட்ட உறுப் பினர்களும் கார்களிலும், பஸ்களிலும், ரயில்களிலும் தனித்தனியாக சென்னையை நோக்கி வருகை புரிய உள்ளனர். 

விழாவில் தஞ்சாவூர் மாவட் டத்திலிருந்து ஆயிரத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்று மாவட்டத் தலைவர் பி.எஸ். ஹமீது அறிவுரைப்படி இத்தகவலை மாவட்டச் செய லாளர் லயன் அ. பஷீர் அஹமது அறிவிக்கிறார்.

Post a Comment

0 Comments