வழுத்தூரில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

வழுத்தூர் ஜமாத் சபை மற்றும் இளைஞர் மன்றம் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை11.09.2012 அன்று சிறப்பாக நடைடப்பெற்றது. ஜமாத்சபை தலைவர் கே..பி அலி தலைமை தங்கினார். செயலாளர் எம் தாஜிதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் .பசீர் அகமது, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஆர்.கமாலுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இஸ்மாயில் கனி வரவேற்றார். பள்ளிவாசல் இமாம்கள் ஹபீபுல்லாசா, முகம்மது ஜலாலுதீன், தேங்கை சர்புதீன், முகம்மது ஆரிப் அகியோர் கலந்து கொண்டு மழை வேண்டி சிறப்பு தொழுகைகளை நடத்தினர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வழுத்தூர் இளைஞர்கள் செய்திருந்தனர்.














































































Post a Comment

0 Comments