செப்டம்பர் 8 கும்பகோணத்தில் நடைபெறும் இ. யூ. முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாடு புதிய எழுச்சியை உருவாக்கும் எம்.அப்துர் ரஹ்மான் எம்.பி. பேட்டி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கும்பகோணத்தில் அடுத்த மாதம் 8-ந் தேதி கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைபெற உள்ளது. இது தமிழ்நாட்டில் புதிய எழுச்சியை உருவாக்கும் என காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங் கிணைப்பாளர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. தெரிவித்தார்.

கும்பகோணத்தில் நேற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள கல்வி விழிப் புணர்வு மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநில துணைத் தலைவர் தளபதி மவ்லானா ஏ.ஷபீகுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்தில் காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங் கிணைப்பாளர் அப்துல்ரஹ்மான் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கும்பகோணத்தில் கல்வி விழிப்புணர்வு மாநாடு அடுத்த மாதம் 8-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு வரவேற்பு குழுவை ஒருங்கிணைந்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள நிர்வாகி களைக் கொண்டு அமைக்கப் பட்டுள்ளது. மாநாட்டிற்கு தமிழ்நாட்டில் எல்லாப் பகுதி களிலிருந்தும் இஸ்லாமிய நிர்வாகிகள், சமுதாய புரவலர் கள், கல்வி நிலைய பிரமுகர்கள், பேராசிரியர்கள் வருகை தர உள்ளனர். மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை மற்றும் மனித வளமேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் இ.அகமது கலந்து கொண்டு மாநாட்டு நிறைவுரையாற்ற உள்ளார். மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், கேரள மாநில கல்வி அமைச்சர் அப்துல்ரப், முன்னாள் கல்வி அமைச்சர் முகமதுபஷீர், மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

மாநாட்டிலச் சிறுபான்மை யின சமுதாயமான முஸ்லிம் களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தில் இட ஒதுக்கீடு 3.5 சதவீதம் என்பதை 7 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும். தமிழக முதல்வர் கொடுத்த தேர்தல் வாக் குறுதியை நிறைவேற்றித்தர வேண்டும். மத்திய சிறைகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை ஒழுக்க நெறிகள் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். 

நீண்டகாலமாக 1991-க்கு பின்னர் பதிவு செய்யப்பட்ட சுயநிதி கல்வி நிறுவனங்களில் உள்ள ஆசிரியர் பணியிடங் களை அரசு நிரப்பிட உத்திரவிட வேண்டும். கடந்த கொண்டு வரப்பட்ட திருமண கட்டாய பதிவு சட்டத்திலிருந்து இஸ் லாமியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும். அதில் திருத்தங்களும் கொண்டு வரவேண்டும். 

இந்தியாவில் மத சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இஸ் லாத்தை ஏற்றுக் கொண் டவர்களை இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் என அரசு பதிவு செய்வதற்குப் பதிலாக இஸ்லா மியர்களாக மதம் மாற்றிய அனைவர் களையும் பிற்பட்டோர் லெப்பை என பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங் களை மாநாட்டில் விவாதிக் கப்பட உள்ளது.

இவ்வாறு எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. பேசினார். 

கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முகம்மது அபூபக்கர், மாநில கல்விப்பணி செயலாளர் ஷாஜகான், தஞ்சை மாவட்ட தலைவர் ஹமீது, தஞ்சை மாவட்ட செயலாளர் பசீர் அஹ்மது, திருவாரூர் மாவட்ட தலைவர் ஜலாலுதீன், செய லாளர் முகைதீன் அடுமை, நாகை வடக்கு மாவட்ட தலைவர் நூருல்லாஹ், நாகை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் நாகூர் ஜான் செய்யது மீரான், தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் நஜீர், நாகை வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் அபூ பாரிஸ், சிடிசன் அப்துல் மஜீத், பிலாக் திலிப் எஹ்யா, காயிதெ மில்லத் பேரவை செயலாளர் முஹம்மது தாஹா உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.




Post a Comment

0 Comments