வேகமாக காட்சி தரும் இயக்கங்கள் மறைந்து போகும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிலைத்து நிற்கும் மேட்டுப்பாளையம் பொதுக் கூட்டத்தில் தலைவர் பேராசிரியர் உரை

வேகமாக இருப்பதாக தங்களை காட்டிக் கொள்ளும் இயக்கங்களெல்லாம் விரைவில் அழிந்து போகும். ஆக்கப்பூர்வ மாக பணியாற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிலைத்து நிற்கும் என தலைவர் பேராசிரியர் குறிப்பிட்டார்.

மேட்டுப்பாளையம் நகரில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டத் தில் சிறப்புரையாற்றிய பேராசிரி யர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டதாவது-

இந்திய நாட்டின் வர லாற்றோடு இணைந்திருக்கும் இயக்கம் தான் முஸ்லிம் லீக். வானத்தில் உள்ள சூரியன், சந்திரன் எப்படி பிரிக்க முடியாமல் உள்ளதோ அதே போலதான் இந்திய சரித்திரத் தில் முஸ்லிம் லீக் பிரிக்க முடியாதது. இதுபோன்ற ஒரு தகுதி இந்தியாவில் உள்ள எந்த ஒரு இயக்கத்திற்கும் இல்லை.

நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த போது ஒரு விவாதம் வந்தது.அதாவது குஜராத் கலவரம் பற்றிய பிரச்சினை எழுந்த போது, ஹைதராபாதிலிருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட உவைஸி, குஜராத் முதலமைச் சர் மோடியை ஒரு பயங்கரமான விலங்கு என வர்ணித்தார். அப்போது சபையில் இருந்த பா.ஜ.க., சிவசேனா எம்.பி.க்கள் முஸ்லிம் லீக் முர்தாபாத் என கோஷம் போட்டார்கள். நான் எழுந்து உவைஸி கூறியதற்கு எதிர்ப்பாக, """"ஏன் முஸ்லிம் லீக் ஒழிக என்கிறீர்கள்?�� என கேள்வி எழுப்பினேன். அப்போது அவர்கள் எங்களைப் பொறுத்த வரை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் முஸ்லிம் லீகர்கள்தான் என்றனர்.

இதைத்தான் காயிதெ மில்லத் கூறினார்கள், `ஆயிரம் ஆண்டுகள் சிந்தித்தாலும் இதுபோன்ற ஒரு இயக்கத்தை யாராலும் துவங்க முடியாது� என்று. எனவேதான் முஸ்லிம் லீக் இந்திய வரலாற்றில் பிரிக்க முடியாத இயக்கமாக உள்ளது. இது வளரவேண்டும் என நாம் விரும்புகிறோம். அதைத்தான் ஆரம்பத்தில் சொன்னேன்; வானத்தில் உள்ள சூரியன், சந்திரன் எப்படி பிரிக்க முடியாமல் உள்ளதோ அதைப் போன்று என்று சொன்னேன். எனவே தான் இது வளர வேண்டும் என எல்லோரும் விரும்புகிறோம். இந்திய யூனியன் 

முஸ்லிம் லீகிற்கு அங்கீகாரம்

இந்தியாவில் சுதந்திரத்திற் குப் பின்பு ஷிஹாப் தங்கள் காலத்தில்தான் முஸ்லிம் லீகிற்கு அகில இந்திய அங்கீ காரம் கிடைத்தது. நமது தேசிய தலைவர் இ.அஹமது சாஹிப் மத்திய அமைச்சரானார். இவர் மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சராக உலகம் முழுவதும் செல்கின்றபோது, அமைச்சர் எனக் கூறப்படுவது மட்டுமல் லாமல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் என உலக நாட்டுத் தலைவர்களிடம் அறி முகப்படுத்தப்படுகிறார். 

கேரளாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வளர்ந்த விதம் குறித்து செய்யது அலி முனவ்வர் தங்கள் கூறினார்கள். அதுபோன்ற சரித்திரம் படைத்த தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் முஸ்லிம் லீக் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறோம். நாம் இந்திய ஜனநாயகத்திற்கு உதவி வரும் இயக்கமாக செயல்படுகிறோம். 

உலகில் அமெரிக்கா பெரிய நாடாக பேசப்பட்டாலும், இந்தியா தான் சிறந்த ஜனநாயக நாடாக உள்ளது. நாட்டின் வலிமை, வளம், செம்மை, ஒழுங்கு, கண்ணியம் ஆகியவற்றில் உலகமே மதிக்கத்தக்க இடத்தை இந்தியா பெற்றுள்ளது.

இந்தியாவில் பாராளுமன்றம் உருவானது முதல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ் கட்சி இருந்து வந்துள்ளது. இது வரலாறு. ஆனால் மற்ற எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து இருந்து வந்தது இல்லை. வரலாற்றில் இடம் பெற்றுள்ள இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தான். இந்த தகுதியை பா.ஜ.க. தி.மு.க., அ.தி.மு.க., கம்யூ னிஸ்ட் கட்சிகள் பெறவில்லை. இந்த நாட்டில் பாராளுமன்றம் உருவான நாள் முதல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளது. இனி இது கியாமத் நாள் வரை தொடரும். புதிய புதிய இயக்கங்களும் - புதிய புதிய பாதைகளும்

நாம் காயிதெ மில்லத் கற்றுத் தந்த பாடத்தை படித்து, அவர் வகுத்துத்தந்த பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். நாம் புதிய பாதையை போட்டு செல்ல முடியாது. இப்போது சமுதாயத்தில் பல இயக்கங்கள் புதிய பாதையை போட்டு புதிய பயணத்தை தொடங்குகின்றன. ஆனால் அவர்களுக்குச் சொல்வது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாதை ஒன்றுதான் வெற்றி தரும் பாதை-நிரந்தர மான பாதை. இந்த பாதையில் பயணம் செய்யும் காலமெல்லாம் நாம் வெற்றி பெறுவோம். நாட்டு மக்களின் நன் மதிப்பை பெறுவோம். இந்த பாதையை விட்டு புதிய பாதையில் பயணத்தை துவங்கியுள்ள இயக்கங்களுக்கு எந்த பயனும் கிடைக்காது. அந்த பாதை நீடிக் கவும் செய்யாது. 

நான் 1954 ஆண்டு முதலாக அரசியலில் இருந்து வருகிறேன். தமிழகத்தில் இன்று வரை எத்தனையோ இயக்கங் கள் தோன்றியது. ஓஹோ என பேசப் பட்டது. ஆனால் அந்த இயக்கங் கள் எல்லாம் காணாமல் போய் விட்டன. அவைகளை உருவாக்கிய தலைவர்களை காணவில்லை. அதேபோன்று இன்று சில இயக்கங்கள் வேகமாக இருப்பது போல தோற்றம் அளிக்கலாம். ஆனால் நிலைக்காது. மறைந்து போகும். இந்த நாட்டில் உள்ள அரசியல், ஜனநாயகம், மதச்சார்பு, கண்ணி யம், பாதுகாக்கப்பட வேண்டிய நல்லிணக்கம் மற்றும் அமை தியை பேணக்கூடிய ஒரே இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டும்தான். இது உலகம் அழியும் வரை நிலைத்து நிற்கும்.

ஏன் என்று சொன்னால், மூன்று நாட்களுக்கு முன்பு லண்டன் பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றியி ருக்கிறார்கள். அது அடுத்த நாட்டில் இலங்கையில் விடு தலைப் புலிகள் இருப்பதாக சொல்கிறார்கள். இந்தியாவில் தடை விதித்துள்ளனர். அது மாதிரி லண்டனில் பாராளுமன் றதிலே இந்தியாவில் உள்ள ஒரு இயக்கத்திற்கு தடை விதித்துள் ளனர். அது எந்த இயக்கம்? இந்திய முஜாகிதீன். இது தீவிரவாத இயக்கம் என்று சொல்லி இது தடை செய்யப் பட்டதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். அதில் ஒரு காரணம் """"இந்தியாவில் வன் முறை மூலம் இஸ்லாமிய ஆட்சி யைக் கொண்டு வந்து ஷரீஅத் ஆட்சியை நிலைநிறுத்துவதற் காகப் பாடுபடுவது இந்த இயக் கம்�� என்று கூறியுள்ளனர். ஆனால் இந்தியாவில் இவர்கள் யார் என்று நமக்கு தெரிய வில்லை. காஷ்மீரில் 48 இயக்கம் இருப்பதாக சொல்கிறார்கள். ஒவ்வொரு இயக்கத்திலும் 5 பேர், 3 பேர், 10 பேர்கள். 

வன்முறை மூலம் கொள்கையை திணிக்க முடியுமா?

இந்தியாவில் வன்முறை மூலம் இஸ்லாமிய ஆட்சியை நிறுவி ஷரீஅத் சட்டத்தை அமுல் படுத்துவதற்கு இந்த தீவிரவாத இயக்கம் முயற்சி செய்த காரணத்தால் இதற்கு தடை விதிக்கின்றோம் என்று சட்டம் நிறைவேற்றியுள்ளார்கள். இங்கே நாம் சொல்ல விரும்புவது நம் நாட்டின் ஜனநாயகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்ட மன்றத்தில், நாடாளுமன்றத் திலே மந்திரிகள் என இடம் பெற்றிருக்கிறோம். நமது கொள்கை என்ன? இந்தியா வில் இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம் நமக்கு இல்லை. ஏனென்றால் இந்தியா ஒரு ஜன நாயக நாடு. ஏதும் வன்முறை மூலம் செய்ய முடியாது அது இறையச்ச அதிகாரம், அது அழிவில் கொண்டு போய்விடும். 

ஜனநாயகம் என்றால் மக் களின் கருத்தை ஏற்று ஒற்று மையை வலியுறுத்தி அவர்களது நம்பிக் கையைப் பெற்றால் தான் மக்களிடத்தில் நிறைய கொண்டு செல்லமுடியும். அது எந்த ஆட்சியாக இருந்தாலும் நாம் சொல்லக்கூடிய கொள்கை மக்கள் ஏற்றுக்கொண்டாக வேண்டும். ஏற்றுக்கொள்ள வில்லை என்றால் அதை வன் முறை மூலம் திணிக்க முடியாது. மக்களின் சக்தி என்பது மகத்தானது. அப்படி மகத்தான சக்தியுள்ள மக்களிடம் இடம் பிடிப்பதற்காக பலாத்காரம் பயன்பெறாது. 

இந்தி மொழியை திணிப்ப தற்கு பல முயற்சிகள் நடந்தன. சட்டத்தில் இருக்கிறது-இந்த நாட்டி னுடைய அதிகாரத்திற் குட்பட்ட மொழி இந்தி மொழி என எழுதி வைத்துள்ளார்கள். இந்த மாநிலத்தில் மற்று முள்ள மாநி லங்களிலும் பள்ளிக்கூடங் களில் சொல்லிக்கொடுப்ப தற்கு- இந்தி மொழியை திணிப் பதற்கு மத்திய அரசு முயற்சி செய்தது. பலிக்க வில்லை. அப் படியிருக்கும் நாட்டில் பலாத்கார மான ஒன்றை கொண்டுபோய் வன்முறையைத் தூண்டி எப்படி திணிக்க முடியும்? நாட்டில் இந்த கொள்கை நம்முடைய கொள்கை கிடையாது. 

அதே நேரத்தில் முஸ்லிம்கள் ஆகிய நாம் தனித்தன்மை யோடு வாழ்வது உரிமையைப் பாது காப்பதற்காக கடமைப்பட் டுள்ளோம். அதுதான் முஸ்லிம் லீக் தலைவர்கள் சொல்லித் தந்துள்ளார்கள். அந்தப் பாதை யில்தான்நாங்கள் பயணிக்கி றோம். நம் உரிமை காக்க சமுதாயம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் ஒருமுகமாக இணைய வேண்டும்.

இவ்வாறு தலைவர் பேராசிரி யர் குறிப்பிட்டார்.

பொதுக்கூட்டத்தில் பங்கேற்றோர்

கோவை புறநகர் மாவட்டம், மேட்டுப்பாளையம் நகர பிரைமரி முஸ்லிம் லீக் சார்பில், காயிதெமில்லத் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம், பெரிய பள்ளி வாசல் அருகில் மஜீத் திடலில் நகர தலைவர்அக்பர் அலி தலைமையிலும், ஹாஜி எம்.எம்.நூர்தீன், ஹாஜி எஸ்.எம். அனீபா, ஹாஜி எம்.அப்துல் காதர் (எ) நஜீர், ஐ.முஹம்மது அலி, எம்.இ.முஹம்மது உசேன், எஸ். சம்சுதீன், எஸ்.அப்துல் ரஜாக், ஹாஜி கே.எம்.முஹம் மது ஜக்கிரியா, ஹாஜி என்.அமீர் அம்ஜா, மௌலவி ஏ.எல்.ஜாபர் அலி இம்தாதி, ஹாஜி டி. ஷாஜஹான், ஹாஜி எம்.கே. அப்துல் ரஹமான், எஸ்.கே.தீன் முஹம்மது ஆகியோர் முன் னிலை வகிக்க, யூ.எப். அப்துல் ஹக்கீம் வரவேற்புடன் பொதுக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் கேரளா மாநில இளைஞர் அணி தலைவர் அல்ஹாஜ் செய்யது முஹம்மது அலி, முனவ்வர் சிகாப் தங்ஙள் சிறப்புரையும், அதற்கு முன்ன தாக ஹாஜி எல்.எம். அப்துல் ஜலீல், ஹாஜி பி.எஸ்.அம்சா, எஸ்.எம்.காசிம், ஹாஜி டி.எச். முஹம்மதுகுட்டி, கூடலூர் எம்.ஏ.சலாம், 

கோவை ஏ.எம். இப்ராஹிம், கோவை பி.முஹம் மது பஷீர், கோவை டி.ஏ.நாசர், கோவை ஹாஜி வி.எம். முகம்மது காசிம், மங்கலம் ஏ.அக்பர் அலி, ஏ.எம்.சுல்தான் பாகவி, மௌலவி முஹம்மது இப்ராஹிம் சிராஜ்தீன், மௌலவி சிராஜ்தீன் பாகவி, எம்.முஹம் மது உம்மர், கோவை பி.அப்துல் கபூர், திருப்பூர் இளம் பிறை ஜஹாங்கீர் ஆகியோர் பேசினர்.

Post a Comment

0 Comments