காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் 189-ம் ஆண்டு கந்தூரி விழா 09.07.2012 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில் புகழ் பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் 189ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த மாதம் 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக் கூடு ஊர்வலம் 09.07.2012 நள்ளிரவு 12 மணிக்குப் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. 10.07.2012 அதிகாலை தர்காவை வந்தடைந்தது. சந்தனக் கூடு ஊர்வலத்தில் கண்ணாடிப் பல்லக்கு, சாம்பிராணி சட்டி பல்லக்கு மற்றும் பல அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்தன. இதைத் தொடர்ந்து 10.07.2012 அதிகாலை மஜ்தான் சாஹிப் வலியுல்லாஹ் அவர்கள் ரவுலா ஷெரீப்பில் சந்தனம் பூசும் வைபவமும் சிறப்பாக நடைபெற்றது.   கந்தூரி விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக வரும் 12ம் தேதி கொடியிறக்க வைபவமும் நடைபெற உள்ளது. சந்தனக்கூடு ஊர்வல நிகழ்ச்சியில் புதுச்சேரி சமூகநல அமைச்சர் திரு.பி.ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.வீ.எம்.சி. சிவக்குமார், திரு. ஏ.எம்.ஹெச்.நாஜிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தர்கா ஷரீப் முத்தவல்லிகள் மற்றும் வக்பு நிர்வாக சபை உறுப்பினர்களும் இணைந்து சிறப்பாகச் செய்திருந்தனர். கந்தூரி விழாவை முன்னிட்டு காவல் துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வெங்கடசாமி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் கந்தூரி விழா சந்தனக் கூடு ஊர்வலத்தைக் காண நாகை, திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்டத்திலிருந்து அனைத்து மத மக்களும் கலந்துக் கொண்டு  ஹஜ்ரத் அவர்களின் து.ஆவினை பெற்று சென்றனார்..



























Post a Comment

0 Comments