புதுக்கோட்டை இடைத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடவில்லை என்று, ஆம்பூரில் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். கே.எம்.காதர்மொய்தீன் கூறி னார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறிய தாவது:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு எல்லா மாநிலங்களிலும் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.வருகிற டிசம்பர் மாதம் உள்கட்சி தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்சி தோன்றி 65 ஆண்டுகள் ஆகிறது.
தற்போது கட்சிக்கு அங்கீ காரம் கிடைத்துள்ளது. இனி வரும் பாராளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தலில் ஏணி சின்னத்தில்தான் போட்டி யிடுவோம். தமிழகத்தில் மாணவரணி சார்பில் நபிகள் நாயகம் பற்றிய கட்டுரை போட்டி நடத்தப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஜூன் 30-ந் தேதி சென்னையில் பரிசுகள் வழங்கப்படும்.
மேலும் தேசிய இளைஞரணி பிரதிநிதிகள் மாநாடு ஜூலை 14, 15 ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இதில் 5 ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொள்கின்றனர். சிறுபான்மை மக்கள் தங்களது தாய் மொழி படிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில்தான் நாங்கள் உள்ளோம். புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடவில்லை. நாங்களும் போட்டியிட போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில செயலாளர்கள் திருப்பூர் எம்.ஏ. சத்தார், எச்.அப்துல் பாசித், மாவட்ட தலைவர் எஸ்.டி. நிசார் அகமது, ஆம்பூர் நகர தலைவர் கே.இக்பால் அகமது, நகர்மன்ற உறுப்பினர்கள் இக்பால், பிலால் மற்றும் அஜீஸ் உள்ளிட் டோர் உடன் இருந்தனர்.

0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........