வழுத்தூரில் மஹ்பூபே சுபுஹானி மஃசூகே ரஹ்மானி மெய்நிலை கண்ட ஞானி கௌதுல் அஃலம் முஹையதீன் அப்துல் காதர் ஜீலானி (ரலி) அவர்களின் நினைவு நாள் 23-02-2012

அஸ்ஸலாமு அலைக்கும்….!
தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் மஹ்பூபே சுபுஹானி மஃசூகே ரஹ்மானி மெய்நிலை கண்ட ஞானி கௌதுல் அஃலம் முஹையதீன் அப்துல் காதர் ஜீலானி (ரலி) அவர்களின் நினைவு நாள் 23-02-2012 (ரபியுல் ஆகிர் 01)  வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை இரவு வழுத்தூர்  முஹையதீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசலில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு மெளலூது  மற்றும்  துவா  ஓதி சிறப்பாக கொண்டாடப்பட்டது கடந்த வருடத்தைவிட இந்த வருடம் மக்கள் அதிகமாக கலந்து கொண்டனர்….
நான்கு கொடி உண்டியல் வசூல் 2,55,000/-.
இன்னும் சில தினங்களில் கந்தூரி வீடியோ UPLOAD செய்யப்படும்……

Post a Comment

7 Comments

  1. அப்துல் காதர் ஜீலானி மெய்நிலை கண்ட ஞானியா?

    கப்ருவணங்கிகள் அப்துல் காதர் ஜீலானியை மெய்நிலை கண்ட ஞானி என்று புகழ்கிறார்கள்! இவர் மெய்நிலையை கண்டுவிட்டார் என்று அல்லாஹ் கூறி வஹியை இறக்கினானா? நபிகளார் (ஸல்) அவர்களுக்கு மெய்நிலை கண்ட ஞானம் இருந்ததா? இதோ அல்லாஹ் என்ன கூறுகிறான்?

    (நபியே!) நீர் கூறும்: ‘என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன’ என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக ‘நான் ஒரு மலக்காக இருக்கின்றேன்’ என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.’ இன்னும் நீர் கூறும்: ‘குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?’ (அல்-குர்ஆன் 6:50)

    இறுதி நபிக்கு இல்லாத இந்த மறைவான ஞானத்தை இந்த அப்துல் காதர் ஜீலானி பெற்றுள்ளார் என்று கப்ருவணங்கிகள் கூறுவது நபியை இழிவுபடுத்தும்விதமாக இல்லையா? எனவே அப்துல் காதர் ஜீலானியை மெய்நிலை கண்ட ஞானி என்று கூறியது பொய் என்பது நிரூபண மாகிவிட்டது!

    மனிதனாக பிறந்து மனிதனாக மடிந்த ஜீலானியை ஆத்மிக கடல் என்றும், ஞானதீபம் என்றும் மெய்நிலை கண்ட ஞானி என்றும் வர்ணிக்கிறார்களே இப்படி சாதாரண மனிதனை அல்ல மாறாக அல்லாஹ்வின் தூதர்களுக்கும் அந்த தூதர்களின் முத்திரையான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கூட வர்ணிப்பது கூடுமா? நபிகளார் (ஸல்) என்ன கூறினார்கள்? இதோ படியுங்கள்

    ஷைத்தான் உங்களைக் கெடுத்து விட வேண்டாம். நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவேன், மேலும் அல்லாஹ்வின் தூதருமாவேன். அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ள தகுதிக்கு மேல் என்னை நீங்கள் உயர்த்துவதை நான் விரும்ப மாட்டேன். (அஹ்மத்,பைஹகீ)

    எனவே சாதாரண மனிதர் அப்துல் காதர் ஜீலானிய தவசீலர் என்றும் மெய்நிலை கண்ட ஞானி என்றும் சங்கைக்குரிய குதுபுர் ரப்பானி என்றும் சுல்தானுல் அவ்லியா என்றும் புகழ்ந்து துதி பாடிய தர்காஹ்வாதிகளை ஷைத்தான் வழிகெடுத்துவிட்டான் இதில் உள்ள மிக முக்கியமான வேடிக்கை என்னவென்றால் தங்கள் குறைகளை கேட்கிறார் என்று எந்த ஜீலானியை இவர்கள் நம்புகிறார்களோ அந்த ஜீலானியே இந்த கப்ருவணங்கிகளை ஷைத்தானிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை! (இறந்த பிறகு எவருக்காவது கேட்கும் ஆற்றல் இருந்தால்தானே காப்பாற்ற இயலும்)

    ReplyDelete
  2. அப்துல் காதர் ஜீலானி ஞானதீபமா?

    ஞானம் என்பது அறிவு, தீபம் என்பது வெளிச்சம் எனவே ஞானதீபம் என்பது அறிவுக்கு வெளிச்சம் தரும் ஒளி என்ற பொருள்படுகிறது அதாவது அல்லாஹ் ஞானம் மிக்கவன் என்று குர்ஆனில் கூறுகிறான் இவர்களோ தங்கள் தலைவரை அந்த ஞானத்திற்கான தீபம் என்று புகழ்கிறார்கள்! இவர்கள் மறைவாக என்ன கூறவருகிறார்கள் என்றால் இந்த ஜீலானி என்ற தீபம் அனைந்துவிட்டால் அல்லாஹ்வுக்கு ஞானம் இல்லை என்ற தத்துவத்தைத்தான்! (இத்தகுல்லாஹ்)! அல்லாஹ்வின் வல்லமையை விட அப்துல் காதர் ஜீலானியை புகழ்ந்தவிட்டதால் ஞானதீபம் என்ற புகழ் முழுக்க முழுக்க பொய் என்று நிரூபணமாகிறது!

    ReplyDelete
  3. அப்துல் காதர் ஜீலானி ஆத்மீக கடலா?

    ஆத்மீக கடல் என்பதன் பொருள் என்னவென்றால் கடல் எவ்வாறு பறந்து விரிந்து காணப்படுகிறதோ அதுபோன்ற அறிவு படைத்தவர் என்று பொருள்படுகிறது. அதாவது ஆன்மீகம், ஆத்மீகம் ஆகியவற்றை கரைத்து குடித்து முத்திப்போனவர் என்று அர்த்தமாகிறது. இஸ்லாத்தில் பழுத்தபழம், முத்திப்போன குருமார்கள் என்று யாரையாவது குறிப்பிட இயலுமா? இதைப்பற்றி அல்லாஹ் என்ன கூறுகிறான் இதோ

    (நபியே!) அல்லாஹ் தன் தூதர்களை ஒன்று கூட்டும் (ஒரு) நாளில் அவர்களிடம் “(நீங்கள் மனிதர்களுக்கு என் தூதைச் சேர்ப்பித்தபோது) என்ன பதில் அளிக்கப்பட்டீர்கள்?” என்று கேட்பான்; அதற்கு அவர்கள்: “அதுபற்றி எங்களுக்கு எந்த அறிதலும் இல்லை; நிச்சயமாக நீதான் மறைவானவற்றை யெல்லாம் அறிந்தவன்” என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 5:109)

    அல்லாஹ் அங்கீகரித்து அனுப்பிய தனது தூதர்களுக்கே மறைவான ஞானம் இல்லாத போது சாதாரண மனிதரான ஜீலானிக்கு ஆத்மீக ஞானம் வந்துவிடுமா? எனவே ஆத்மீக கடல், ஆத்மீக ஞானி என்ற புகழ் பொய் என்பது நிரூபணமாகிவிட்டது!

    ReplyDelete
  4. உலகத்திற்க்கே தெரியும் ஹzரத் எஜமான் முஹைய்யத்தீன் ரலியல்லாஹீ அன்ஹீ யார் என்று..... வஹ்ஹாபிகள் புதிதாக வியாக்கியான்ம் பேச வருகிறாற்கள் விளக்கங்கள் எவ்வளவு கொடுத்தோ திருந்திய பாடு இல்லை....லக்கும் தீனுக்கும் வலிய்யத்தீன் உங்கள் வஹ்ஹாபிய மார்க்கம் உங்களுக்க்கு எங்கள் அவ்லியாக்கள் காட்டித் தந்த எங்கள் தீன் எங்களுக்கு..அவ்லியாக்கள் எங்களுக்கு நூர் அவர்கள் எங்களுக்கு ஒளியாக இருந்து வழி காட்டுவார்கள்...தயவு செய்து எங்களிடம் விவாதம் பண்ண வேண்டாம்.....

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைகும்!
    அன்பு சகோதரர்களே, நாம் அனைவரும் அல்லாஹ்வின் வேதமான குர்ஆனை பற்றி பி(ப)டித்து, நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலான நபி வழியையும் பின்பற்றினால்தான் நேர் வழியை அடைய முடியுமே தவிர, அதல்லாத பாதையை தேர்ந்தெடுபோமானால் நாம் நிச்சயமாக வழிகேட்டிலே விழுந்து கைசேதமடைந்தோராகத்தான் ஆவோம். அவரவரின் செயல்களுக்கு அவரவரே பொறுப்பாளியாவார்...

    "அந்த உம்மத்து(சமூகம்) சென்றுவிட்டது; அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே; நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள். (2:134)

    "அந்த உம்மத்து(சமூகம்) சென்றுவிட்டது. அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே; நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள். (2:141)

    அப்துல் காதிர் ஜீலானி நல்லடியாராக இருந்தால் அதற்கான கூலியை அல்லாஹ்விடம் அவர் பெற்றுக்கொள்வார். அவர் நல்லடியார் என்பதற்காக மற்றவருக்கு அவரால் எதுவும் செய்ய முடியாது.

    "(நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.” (7:188)

    "(நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எவ்விதத் தீமையோ, நன்மையே, எனக்கே செய்து கொள்ள, நான் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்கவில்லை; ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு (குறிப்பட்ட காலத்)தவணையுண்டு; அவர்களது தவணை வந்து விட்டால் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்.” (10:49)

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நிலையே இதுவானால் மற்றவர்களின் நிலையைப்பற்றி கூற வேண்டியதேயில்லை. நம் அனைருக்கும் நேர்வழி காட்ட அல்லாஹ்வே போதுமானவன்.

    அஸ்ஸலாமு அலைகும்!
    ABUBACKER S.M
    Chennai

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைகும்!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........