தி.மு.க.-காங். கூட்டணி ஏற்படஇ.யூ.முஸ்லிம் லீக் செய்த மெய் சிலிர்க்க வைத்த தியாகத்திற்காக தந்ததையும், தரவேண்டியதையும், தம்பியையும் தருவோம் கலைஞரின் பாராட்டை குறிப்பிட்டு அமைச்சர் துரைமுருகன் பேச்சு

திமுக-காங்கிரஸ் கூட்டணி ஏற்பட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் டெல் லியில் மேற்கொண்ட முயற்சி யும், எங்களுக்கே தெரியாமல் தொகுதியை அவர்கள் விட் டுக் கொடுத்த தியாகமும் எங்களை மெய் சிலிர்க்க வைத்தது என பாராட்டிய கலைஞர், இதற்கு பரிசாக தந்ததையும் தருவோம், தம்பி யையும் தருவோம், தரவேண் டியதை தருவோம் என குறிப் பிட்டார் என தமிழக சட்டத் துறை அமைச்சர் துரை முருகன் சுட்டிக் காட்டினார்.

இந்திய யூனியன் முஸ் லிம் லீகின் 64வது நிறுவன தினத்தையொட்டி சென்னை சி.என்.கே. சாலை யில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் துரை முருகன் பேசியதாவது:


கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்க ளால் துவங்கப்பட்டு பேரா சிரியர் கே.எம்.காதர் மொகி தீன் அவர்கள் தலைமை யில் இன்று 64வது நிறுவன தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திமுக தலைமையிலான கூட்டணியில் பெருமைக் குரிய தோழமைக் கட்சி யாக விளங்குவது நாமெல் லாம் மகிழக்கூடியதாக அமைந்துள்ளது.

இந்த இயக்கத்தின் சார் பில் இன்று சாதனையாளர் களுக்கு பாராட்டுக்களும், விருதுகளும் வழங்கப்படு வதோடு தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சார தொடக் கப் பொதுக் கூட்டமாக வும் இந்நிகழ்ச்சி அமைந் திருக்கிறது.

கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் மட்டு மல்லாது, அகில இந்திய அளவில் பெரும் பர பரப்பை ஏற்படுத்திய திமுக-காங்கிரஸ் கூட்டணி பிரச்சினை சுமுகமாக முடி வடைந்து தொகுதி பங் கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதென் றால் அதற்கு முக்கிய கார ணம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பதை யாரும் மறுத்து விட முடியாது.

இந்தியாவில், முஸ்லிம் லீக் தொடங்கப்பட்டது நாட்டு பிரிவினைக்காக அல்ல, நாட்டு மக்களை ஒற் றுமை படுத்தி அனைவரும் ஒன்றாக வாழத்தான் என காயிதெ மில்லத் அவர்கள் விளக்கமளித்துள்ளதற்கு மற்றொரு உதாரணமாக முஸ்லிம் லீகின் தற்போ தைய பணி அமைந்துள் ளது.

அதனால்தான், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலை ஞர் உட்பட திராவிட இயக்கத் தலைவர்கள் அனைவரும் முஸ்லிம் லீகோடு கொள்கை ரீதி யான உறவை தொடர்ந்து மேற்கொண்டு வருகின் றனர்.

முஸ்லிம் லீக் அங்கம் வகிக்கும் கூட்டணி பலம் பெற வேண்டும்-வலிமை பெற வேண்டும் என்ற நோக்கோடு புதுடெல்லி யில் காங்கிரஸ் கட்சியுடன் பேசி, சுமூகமான உறவு ஏற்படும் வகையில் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 3 தொகுதிகளில் 1 தொகு தியை முஸ்லிம் லீக் விட்டுக் கொடுத்துள்ளது என்பதை அறிந்ததும் கலைஞர் அவர்கள் மிகவும் நெகிழ்ந்து போனார்.

அவர்களுக்கு வெறும் மூன்று தொகுதிதான் கொடுத்தோம். அதில்கூட ஒன்றினை விட்டுக் கொடுக் கிறார்கள் என்றால் அவர்க ளது தாராள மனப்பான்மை பாராட்டுக் குரியது-போற்றுதலுக் குரியது என நெகிழ்ந்து போய் கலைஞர் குறிப்பிட் டார்.

நமக்கு கூட தெரியாமல் அவர்கள் விட்டுக் கொடுத்த ஒரு தொகுதிக்கு கைமாறாக நாம் என்ன செய்யலாம்-எப்படி செய்ய லாம் என்பதை யோசித்து இப்போது முஸ்லிம் லீகிற்கு தந்ததையும், தர வேண்டியதையும், தம்பி யையும் தருவோம் என கூறி அங்கேயே ஒரு சிறப்பான பரிசினை முஸ்லிம் லீகிற்கு வழங்கியுள்ளார்.

கலைஞர் அவர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட அண்ணன் என மரியாதை யுடன் அழைக்கப்படும் திருப்பூர் மைதீன் அவர் களின் மகனான திருப்பூர் அல்தாப் நடத்திவந்த தமிழ் மாநில தேசிய லீகினை முஸ்லிம் லீகோடு இணைந்து செயல்பட வேண்டுகோள் விடுத்து, இரண்டு தரப்பினரையும் அழைத்து பேசி-இணைப் பினை உருவாக்கி கொடுத் துள்ளார்.

இதுமட்டுமல்ல, ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்ததன் மூலம் இன்னும் பல நன்மைகளை நீங்கள் பெறப்போகிறீர்கள் அதனை இன்றும் ஓரிரு நாளில் தெரிந்து கொள் வீர்கள் என்பதை மட்டும் இப்போதைக்கு தெரிவித்து விடைபெறுகிறேன்.

இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

Post a Comment

0 Comments