ஃபேஸ்புக்கும் சில அதிர்ச்சித் தகவல்களும்..!


உலகில் இன்று பெரும்பாலோனோர் நாளின் பல மணி நேரங்களை ஃபேஸ்புக்கில்தான் கழிக்கிறார்கள்.அத்துனை தூரம் ஃபேஸ்புக் மக்களின் அன்றாட வாழ்க்கையை ஆக்கிரமித்துள்ளது.விளைவு, ஃபேஸ்புக் பற்றிய செய்திகள் நாளேடுகளை ஆக்கிரமித்துள்ளன.அத்தகைய செய்திகளுள் சில நம்மை ஆச்சரியப்பட வைத்தாலும் பல  நம்மை பயமுறுத்தவே செய்கின்றன என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.அத்தகைய பயமுறுத்தும் ஃபேஸ்புக் பற்றிய செய்தி ஒன்றைத்தான் நீங்கள் படிக்க இருக்கிறீர்கள் இந்தப் பதிவில். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு சம்பவம் இது.ஒரு ஆஸ்திரேலியப் பெண், ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இளம்பெண்களை தனியாக விமானப் பயணம் செல்ல அனுமதிப்பதற்க்கு மிகுந்த அச்சமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்!

திடீரென்று ஏனிந்த அச்சம்? கேட்கத்தோன்றுகிறதல்லவா? சரி, இதற்க்கும் ஃபேஸ்புக்குக்கும் என்ன தொடர்பு என்றுதானே கேட்கிறீர்கள்? இந்த அச்சத்திற்க்கு அடிப்படை காரணமே ஃபேஸ்புக்தான் என்கிறார்  மெல்போர்னை சேர்ந்த அந்த பெண்.அதாவது, சர்ச்சைக்குறிய இந்தப் பேட்டியை அளித்த அந்த பெண் 15, 16 வயதான இரண்டு இளம் பெண்களின் தாய்.நடந்தது என்னவென்றால், இந்த இரண்டு பெண்களும் சமீபத்தில் உள்நாட்டு விமானப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் சென்ற அந்த விமானத்தின்  ஆண் உதவிப் பணியாளர் ஒருவர் கழிவறை செல்லுமிடத்திற்கு வெளியில் இவர்கள  இருவரும் நிற்கையில்  நைசாகப் பேச்சுக் கொடுத்திருக்கிறார்.ஆனால் உஷாரான இந்த பெண்கள் இருவரும் தங்கள் பெயரைக்கூட சொல்லாமல் நழுவியிருக்கிறார்கள்.ஆனால், அவர்கள் இருவரும் வீடு சேர்ந்து சில மணி நேரத்திற்குள்ளாகவே அந்த விமானப் பணியாளரிடமிருந்து இவர்களுக்கு ஃபேஸ்புக் நட்பு விண்ணப்பம் ஒன்று வந்திருக்கிறது என்கிறார் இந்த பெண்களின் தாய்!

அந்தப் பெண்மணி விமான பதிவுக்கோப்புகளிலிருந்த இந்த இரு பெண்களின் விபரங்களை எடுத்துத்தான் அந்த உதவிப் பணியாளர் இவர்களுக்கு ஃபேஸ்புக் நட்பு விண்ணப்பம் கொடுத்திருக்க முடியும் என்கிறார், ஆனால் விமான நிறுவனமோ இல்லை அவர்கலின் போர்டிங் பாசிலிருந்துதான் அந்த நபர் விபரங்களை எடுத்திருப்பார் என்று மறுத்திருக்கிறது! எது எப்படியோ, அந்த பெண்ணின் கூற்றுப்படி அந்த ஆண் விமானப் பணியாளர், விமானப்பயணிகளின் குறிப்பாக சிறுவயது பெண்களின்  விபரங்களை எடுத்து அவர்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு அவருக்கு வாய்ப்புகள் இருப்பது மிகுந்த அச்சத்தைத் தருகிறது!
அதிர்ஷ்டவசமாக என் மகள்கள் அவரை  நிராகரித்து விட்டார்கள்.ஆனால் எனக்குத் தெரிந்து சில பள்ளி செல்லும் சிறு வயதுப் பெண்கள் ஒருவித விளையாட்டுத்தனத்தினால் “ஏய்…ஒரு வயதான விமான பணியாளர் எனக்கு ஃபேஸ்புக்கில் நட்பு விண்ணப்பம் கொடுத்திருக்கிறார்…சரியென்றி சொல்லித்தான் பார்ப்போமே என்னதான் ஆகிறதென்று” என்று சமயங்களில் செய்வதுண்டு என்கிறார்.மேலும் அவர், இத்தகைய செயல்கள் கடைசியில் எங்கு சென்று முடியும்? தன்னை தங்கள் ஃபேஸ்புக் நட்பு வட்டத்தில் சேர்த்துவிட்ட பின் அந்த மனிதர், சரி……நாம் எங்கு/எப்போது சந்திக்கலாம் என்பதில்தானே? என்று கேள்வி எழுப்புகிறார் அந்த தாய்! முற்றிலும் உண்மைதானே?

ஜெட்ஸ்டார் என்னும் அந்த விமான நிறுவன செயளாலர் இதுகுறித்த விசாரனை நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.சம்பந்தப் பட்ட அந்த விமானப் பணியாளரை குற்றச்சாட்டு குறித்த பல கேள்விகளை கேட்டுக்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அதெல்லாம் சரி, இந்தப் பதிவு நம் நாட்டுக்கு எந்த அளவுக்கு தொடர்புடையது என சிந்தித்தோமானால், சமீப காலங்களில் மிக மிக அதிகப்படியான மக்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் போன்றோரை இந்த ஃபேஸ்புக் மோகம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பதாகவே நான் அறிகிறேன். ஆகையால், இது போன்ற செய்திகளை படிக்கும் பொழுது, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்கள் நன்மைக்காக பயன்படுதைவிட இதுபோன்ற விபரீதங்களுக்கே பெரிதும் துணைபோவதாகத் தோன்றுகிறது!
எனவே இப்பதிவின் மூலம் நண்பர்களனைவருக்கும் நான் சொல்ல நினைப்பது என்னவென்றால், அனாவசியமாக மிக முக்கியமான சுய விபரங்களை ஃபேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களில் குறிப்பிட வேண்டாம்,முக்கியமாக பெண்கள்! அவ்வாறு குறிப்பிடுவதன் மூலமாக நாம் அடையும் லாபங்கள் என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை.ஆனால் விபரீதங்கள் என்று பார்த்தால் பட்டியலிட இந்தப் பதிவு போதவில்லை என்பதே உண்மை.ஆகவே கவனமாக இருங்கள்! உலகில் நல்லவர்கள் ஏனோ நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறார்கள்!

Post a Comment

0 Comments