வழுத்தூரில் முஸ்லிம் லீக்

25,26,27 மூன்று தினங்களில் வழுத்தூரில் முஸ்லிம் லீக் பயிற்சி முகாம் தலைவர் பேராசிரியர் துவக்கிவைக்கிறார்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலம் சார்பாக தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் வருகிற 25,26, 27 ஆகிய மூன்று தேதிகளில் முஸ்லிம் லீக் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியை தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவருமான முனீருல் மில்லத் கே.எம்.காதர் மொகிதீன் துவக்கிவைக்கிறார். 35வயதிற்குட்பட்ட 500 இளைஞர்கள் பங்கேற்று பயிற்சி பெற உள்ளனர். இந்நிகழ்ச்சியில் 19 தலைப்புகளில் மாநில மாவட்ட மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உரையாற்றுகின்றனர்.

வருகிற 25,26,27 மூன்று தினங்கள் தஞ்சை மாவட்டம் வழுத்தூர் ராயல் மஹாலில்
முஸ்லிம் லீக் பயிற்சி முகாம் நடைபெற வுள்ளது. இம்முகாமிற்கு தமிழகம் முழுவதிலிருந்தும் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்கின்றனர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகள், கல்லூரி பேராசிரியர்கள் ஆற்றும் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகின்றனர்.

25.12.09 வெள்ளிக்கிழமை காலை 9.30மணிக்கு வழுத்தூர் மதரஸா பள்ளி வாசல் முன்பு பச்சிளம் பிறைக்கொடி ஏற்றப்படுகிறது. அதைத் தொடர்ந்து பயிற்சியாளர்களின் வருகை பதிவு நடைபெறும்.

காலை 10மணிக்கு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பயிற்சி முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் தலைமை தாங்குகிறார். மாவட்ட தலைவர் எம்.ஏ. குலாம் மைதீன், மாவட்ட செயலாளர் பி.எஸ். ஹமீது, அய்யம் பேட்டை-சக்கராபள்ளி முஸ்லிம் பரிமான ஜமாஅத் சபை தலைவர் ஓ.ஆர். ஜே. முஹம்மது பஷீர், பண்டாரவாடை ஸ்கீம் டிரஸ்ட் போர்ட் தலைவர் பி.ஏ. சேக் அலாவுதீன், ,ராஜகிரி என்.ஏ. முஹம்மது யூசுப் அலி, திருப்பாளத்துறை, பாபநாசம் பெரிய பள்ளிவாசல் முத்த வல்லி ஓ.ஏ.ஜே முஹம்மது பாரூக், வடக்குமாங்குடி-வஞ்சுவழி ஜமாஅத் சபை தலைவர் ஏ. முஹம்மது சாலிஹ், பசுபதி கோயில் தக்வா மஸ்ஜித் தலைவர் எம்.எஸ். முஹம்மது அலி மிஸ்பாஹி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொருளாளர் கர்நாடகா தஸ்தகீர் ஆகா, இஸ்லாமிய கலாச்சார பேரவை நிறுவனர் மௌலவி பி.எம்.ஜியாவுதீன் பாகவி, துபை ரமலான் நற்பனி மன்றம் கௌரவ தலைவர் வாலன் ஜே. சுலைமான் பாட்சா ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். முஸ்லிம் லீக் பயிற்சி முகாம் கன்வீனர் மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயீல் வரவேற்புரையாற்றுகிறார்.

முஸ்லிம்லீக் தலைமைத்துவ மகத்துவம் என்ற தலைப்பில் மாநில அமைப்புச் செயலாளர் நெல்லை மஜீத், கண்ணியத்திற் குரிய காயிதெ மில்லத் என்ற தலைப்பில் மாநில மார்க்க அணிச் செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான், சிந்தனைச் செம்மல் சிராஜுல் மில்லத் என்ற தலைப்பில் மாநில மக்கள் தொடர்புச் செயலாளர் கவிஞர் இஸட். ஜபருல்லாஹ், முஜாஹிதே மில்லத் ஜி.எம். பனாத் வாலா சாஹிப் என்ற தலைப்பில் முஸ்லிம் லீக் பயிற்சி முகாம் அமைப்புக் குழு உறுப்பினர் எல்.கே.எஸ். மீரான் மைதீன், முஸ்லிம் லீக் முன்னணி தலைவர்கள் என்ற தலைப்பில் அதிரை எஸ்.எஸ்.பி. நஸ்ருதீன், மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு என்ற தலைப்பில் மாநில வக்பு விவகார செயலாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், ஊடகத்துரையில் நம் பங்களிப்பு என்ற தலைப்பில் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழக பொதுச் செயலாளர் முனைவர் சேமுமு. முஹம்மதலி, மத்திய மாநில அரசுகளில் நலத்திட்டங்கள் என்ற தலைப்பில் மௌலவி ராஜா ஹுசைன் ஆகியோர் உரையாற்று கின்றனர்.

தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் சிம்லா பி.ஏ. முஹம்மது நஜீப் நன்றியுரையாற்றுகிறார்.

26.12.09 சனிக்கிழமை காலை 10மணிமுதல் 12 மணிவரை மாநில செயற் குழு கூட்டம் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பயிற்சி முகாம் பேராசிரியர் தலைமையில் நடைபெறுகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தஞ்சை மாவட்ட தலைவரும் டவுன் காஜியுமான மௌலவி டி.காதர் ஹுசைன் கிராஅத் ஓதுகிறார். மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஏ. பஷீர் அஹமது வரவேற்புரையாற்றுகிறார். மாநில துணைத் தலைவர்கள் ஏ.கே. அப்துல் ஹலீம், அரூர் அப்துல் ஹாலிக், எழுத்தரசு ஏ.எம். ஹனீப், கோவை அப்துல் ஜலீல், எஸ்.எம். காதர் பாட்சா, எம்.பி. காதர் ஹுசைன், எஸ்.எம்.கோதர் மைதீன், திருப்பூர் ஹம்ஸா மௌலவி ஷாஹுல் ஹமீது ஜமாலி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தாய்ச்சபையின் எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்ற தலைப்பில் வேலூர் நாடாளமன்ற உறுப்பினரும் காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப் பாளருமான எம். அப்துர் ரஹ்மான், அரசு செயல் திட்டங்கள் அணுகுமுறை என்ற தலைப்பில் அரவாக் குறிச்சி சட்ட மன்ற உறுப்பினரும் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினருமான எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், சன்மார்க்க பாதையில் சமுதாயப் பணி என்ற தலைப்பில் மாநில பொருளாளர் வடக்கு கோட்டை வி.எம். செய்யது அஹமது, சட்டமன்ற, நாடாளுமன்ற அவைகளில் முஸ்லிம் லீக் பங்களிப்பு என்ற தலைப்பில் மாநில மஹல்லா ஜமாஅத் ஒருங் கிணைப்புச் செயலாளர் கமுதி பஷீர் அஹமது, ஆன்மீக நெறியில் முஸ்லிம் லீக் அரசியல் பயணம் என்ற தலைப்பில் மாநில ஆலிம் அணி அமைப்பாளர் என். ஹாமித் பக்ரி ஆகியோர் உரையாற்று கின்றனர்.

தஞ்சை மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் ஆர்.ஷாஜஹான் நன்றி யுரையாற்றுகிறார்.

27.12.09 ஞாயிற்றுக்கிழமை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில வெளிநாடு வாழ் அமைப்பான காயிதெ மில்லத் பேரவை ஒருங்கினைப்பாளர் எம். அப் துர் ரஹ்மான் எம்.பி., தலைமை தாங்குகிறார். முஸ்லிம் லீக் முன்னணி தலைவர் மௌலவி எஸ். எஸ். பசுருதீன் அஹ்மத் கிராஅத் ஓதுகிறார. தஞ்சை மாவட்ட துணைத் தலைவர் பி.எம். தாஜுதீன் வரவேற்புரையாற்றுகிறார். முஸ்லிம் லீக் பயிற்சி முகாம் அமைப்புக்குழு உறுப்பினர்கள் ஏ. அன்வர் பாஷா, ஏ.ஹெச். இஸ்மாயில், முஸ்லிம் லீக் ஒன்றிய கவுன்சிலர் ஏ.எஸ். முஹம்ம தலி, பிரைமரி முஸ்லிம் லீக் செயலாளர் எம். கமாலுதீன் பைஜி, ஹலீமா மஸ்ஜித் தலைவர் எம். கமால் பாட்சா, மதரஸா பள்ளி வாசல் தலைவர் என்.கே.என். ஜாபர் சாதிக், பெரிய பள்ளிவாசல் பஞ்சாயத்து நிர்வாக சபை தலைவர் எஸ்.டி.கே. முஹம்மது முஸ்தபா கமால் பாட்சா, வழுத்தூர் எம்.ஜே. அப்துல் ரவூப் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தேர்தல்களில் முஸ்லிம் லீக் செயல்பாடு என்ற தலைப்பில்வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் ஹெச். அப்துல் பாசித், முஸ்லிம் லீக் வரலாறு என்ற தலைப்பில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப், சமூக நல்லிணக்கத்திற்கு தாய்ச் சபையின் பங்களிப்பு என்ற தலைப்பில் மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஏ.எஸ். பாத்திமா முஸப்பர், முஸ்லிம் லீகில் இளைஞர்கள், மாணவர்கள் பங்கு என்ற தலைப்பில் மாநில இளைஞர் அணி அமைப்பாளர் கே.எம். நிஜாமுதீன், பேச்சுக்கலை என்ற தலைப்பில் இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழக பொதுச் செயலாளர் பேராசிரியர் சாயுபு மரைக்காயர், ஆகி யோர் உரையாற்றுகின்றனர்.

இம் முகாம்களில் பங்கேற்ற பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் குர்ரம் அனீஸ் உமர், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் நிறைவுப் பேருரை யாற்றுகிறார். முஸ்லிம் லீக் பயிற்சி முகாம் அமைப்புக் குழு கன்வீனர் மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில் நன்றியுரையாற்றுகிறார்.

சிறப்பான ஏற்பாடுகள் பயிற்சி முகாமில் பங்கேற்கும் பயிற்சியாளர்கள் மற்றும் பார்வையாளர் களாக பங்கேற்கும் மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு வழுத்தூர்-மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஹலீமா மஸ்ஜித், அலிஃப் மெட்ரிக் பள்ளி மற்றும் பெரிய பள்ளிவாசல் ஆகிய இடங்களிலும், அய்யம்பேட்டையிலும் வசதியுடன் கூடிய தங்கு மிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரூ.200 செலுத்தி பயிற்சி யாளர்களாக பதிவு செய்தி ருப்பவர்களுக்கு முகாம் ஏற்பாட்டு குழுவின் சார்பாக பிரதிநிதிகள் பேட்ஜ், மணிவிழா மலர், முஸ்லிம் தனியார் சட்டம், மற்றும் பாப்ரி மஸ்ஜித் ஆகிய தலைப்புகளில் தமிழில் வெளிவந்த ஜி.எம். பனாத் வாலா சாஹிப் பாராளு மன்ற உரைகள், லிபரான் கமிஷன் அறிக்கை விவாதத்தில் பங்கேற்ற முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். அப்துர் ரஹ்மான், ,டி. முஹம்மது பஷீர், மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரின் பாராளுமன்ற தொகுப்பு நூல், வரலாற்று ஆய்வாளர் செ. திவான் எழுதிய மாலிக் காபூர் என்ற நால், அடைந்திடும் வழிகளும் என்ற தகவல் களஞ்சியம் 2009 உள்ளிட்ட நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட உள்ளன.

முஸ்லிம் லீக் பயிற்சி முகாம் சம்பந்தமாக முகாம் கன்வீனர் மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில் செல், 9444010313, நிகழ்ச்சி நடைபெறும் இடம் குறித்தும் மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் வழுத்தூர் ஏ. பசீர் அஹமது செல், 944 3050790 ஆகியோரை தொடர்பு கொள்ள மாநில தலைமை நிலையத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறார்கள்.



Post a Comment

0 Comments