
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - வழுத்தூர் கிளை, ALIF BLOOD DONORS வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து நடத்திய முப்பெரும் விழா வழுத்தூர் மதரஸா வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. தேசிய கொடியினை வழுத்தூர் முன்னாள் பிரைமரி தலைவர், முஹம்மது ஷெரிப் அவர்கள் ஏற்றி சிறப்பித்தார். வழுத்தூர் முஸ்லிம் லீக் ஐ.டி விங் மக்கி பெரோஸ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். 75-வது சுதந்திர விழாவை முன்னிட்டு 75 மரக்கன்றுகளை நடும் திட்டத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துனைச்செயலாளர் நத்தர்ஷா, மாவட்ட துனைத்தலைவர் ஷாஜகான் அவர்கள், மாவட்ட செயலாளர் அப்துல் காஸிம் ராஜாஜி, மாவட்ட பொருளாளர் ஜுல்பிகர் மற்றும் நிர்வாகிகள் துவங்கி வைத்தனர். விழாவில் மாவட்ட, பிரைமரி முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்._
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........