தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிப்பு முழு விவரம்

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிப்பு


அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

7 மணி வரை அனுமதிக்கப்பட்ட கடைகள் 5ம் தேதி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. 

ஓட்டல்களில் 50 சதவீதம் வாடிக்கையாளர் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

தேநீர் கடைகளிலும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

5ம் தேதி காலை 6 மணியிலிருந்து அனைத்து மாவட்டங்களிலும் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

மாவட்டங்களுக்கு இடையே இருந்த இ-பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு உள்ளேயும் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

பொது போக்குவரத்துக்கான பேருந்துகளில் ஏ.சி வசதி கிடையாது.

கேளிக்கை விடுதிகளில் (Clubs) உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள் மற்றும் உணவகங்கள் மட்டும் கொரொனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். 

அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் உரிய காற்றோட்ட வசதியுடன், ஒரு நோத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். 

டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

அனைத்து வழிபாட்டுத் தலங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை. 

வணிக வளாகங்கள் (Shopping Complex / Malls) காலை 9.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் 50% இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும். வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் மற்றும் விளையாட்டுக் கூடங்களுக்கு அனுமதி இல்லை. 

எதெற்கெல்லாம் தடை 


மாநிலங்களுக்கு இடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்துக்கு தடை. 

மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை. 

திரையரங்குகள் திறக்க அனுமதி இல்லை. 

நீச்சல் குளங்களுக்கு அனுமதி இல்லை. 

பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி இல்லை. 

பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை. 

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி இல்லை. 

உயிரியல் பூங்காக்கள் திறக்க அனுமதி இல்லை. 

தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரம்:


https://drive.google.com/file/d/1zhw16PDhloLmnOz2gsCFYkkmF5--SgNm/view?usp=sharing

Post a Comment

0 Comments