ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளா தெலுங்கானாவில் புதிய கட்சியை தொடங்கி உள்ளார். கட்சியின் பெயர் ‘ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி’ என்பதாகும்.
தனது தந்தையும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான எஸ்.ராஜசேகர ரெட்டியின் பிறந்த நாளான இன்று ஷர்மிளா புதிய கட்சியைத் தொடங்கினார்இந்நிகழ்ச்சி ஹைதராபாத்தில் உள்ள ஜே ஆர் சி கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. கட்சி மற்றும் கட்சிக்கான கொடியை அறிமுகப்படுத்தும் இந்த நிகழ்ச்சியில் ஷர்மிளாவின் தாயார் விஜயம்மாவும் உடன் இருந்தார்
கட்சியை தொடங்கி வைத்த பின்னர் ஷர்மிளா பேசுகையில்
தெலங்கானா மாநிலத்தில் ஒய் எஸ் ஆரின் நல்லாட்சியைக் கொண்டு வருவது தான் தங்கள் கட்சியின் நோக்கம் எனவும் கூறியுள்ளார். தெலுங்கானாவில் தெலுங்கானா மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை முதல்வர் சந்திரசேகரராவ் நிறைவேற்றவில்லை.கடந்த ஏழு ஆண்டுகளில் முதல்வர் சந்திரசேகர ராவ் தவிர வேறு எந்த குடும்பமும் வறுமையிலிருந்து மீளவில்லை என ஷர்மிளா குற்றம்சாட்டினார்.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........