மொபைலில் முகத்தை ஸ்கேன் செய்து கொரோனா பரிசோதனை.. சில நிமிடங்களில் ரிசல்ட் நவீன முறைக்கு ஒப்புதல் அளித்த அபுதாபி
அபுதாபியில் உள்ள யாஸ் தீவு மற்றும் முசாபா பகுதிகளில் முதலில் இந்த கருவியை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்த கருவி மூலம் 20 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 90சதவீதம் சரியான முடிவுகள் பெறப்பட்டுள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்
ஸ்மார்ட்போன்களில் இந்த ஸ்கேனர்கள் மின்காந்த அலைகள் மூலம் செயல்படுகிறது சோதனை செய்யும் இடத்தில் இருந்து 5 மீட்டர் தொலைவில் அந்த ரீடர் பொருத்தப்படுகிறது
கொரோனா தொற்று இல்லை என்றால் பச்சை நிறத்தில் ஒளிரும். தொற்று இருந்தால் சிவப்பு நிறத்தில் ஒளிரும். சிவப்பு நிறம் காட்டிய நபர்கள் 24 மணி நேரத்திற்குள் பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்
கொரோனா நோய்த்தொற்றுகளைக் கண்டறிய உதவும் அதிநவீன EDE ஸ்கேனர்கள் ஷாப்பிங் மால்கள், சில குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அபுதாபியில் உள்ள அனைத்து நில மற்றும் விமான நிலைய நுழைவு இடங்களிலும் வைக்கப்படும் என்று அபுதாபி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
வரும் காலங்களில் இந்த EDE ஸ்கேனிங் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கும்
Source
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........