இன்று ஜூலை 1 முதல் மாற்றம் வரும் முக்கிய 6 சேவைகள் முழு விவரம்
ஓட்டுநர் உரிமம்
ஓட்டுநர்
உரிமத்தைப் பெற,இனி போக்குவரத்து அலுவலகத்திற்கு (RTO) செல்ல
வேண்டியதில்லை. ஏனெனில், ஜூலை 1 முதல் புதிய விதிகளின்படி, இனி ஓட்டுநர்
பயிற்சிப் பள்ளிகளிலே அதற்கான பயிற்சியை முடித்து விட்டு ஓட்டுநர்
உரிமத்தைப் பெறலாம்.
எஸ்பிஐ சேவைகளுக்கு கட்டணம் அமல்
எஸ்.பி.ஐ
வாடிக்கையாளர்கள், ஏடிஎம் மூலமாக ஒரு மாதத்தில் நான்கு முறை மட்டுமே
இலவசமாக பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியும். அதற்கு மேல் உபயோகித்தால்
கூடுதலாக ரூ .15 + ஜிஎஸ்டி கட்டணங்கள் செலுத்த வேண்டும்
இந்த 6 வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பிஎப் கணக்கில் புதிய IFSC கோடு அப்டேட் செய்யனும்
ஆந்திரா வங்கி , ஓரியண்டல் வங்கி , அலகாபாத் வங்கி , சிண்டிகேட் வங்கி , யுனைடெட் வங்கி , கார்ப்பரேஷன் வங்கி இந்த 6 வங்கிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் தங்களின் பிஎப் கணக்கில் வங்கி விவரங்களை புதுப்பிக்க வேண்டுமென தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) துறை அறிவுறுத்தி உள்ளது. வங்கிகள் இணைப்பு காரணமாக, வங்கிகளின் ஐஎப்எஸ்சி கோடு மாறி உள்ளது. பழைய ஐஎப்எஸ்சி கோடுகள் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் செயல் இழந்துள்ளன.
6 வங்கிகளின் வாடிக்கையாளர் கவனத்திற்க்கு
இந்தியாவில்
உள்ள பெரு வங்கிகளுடன் சிறிய வங்கிகள் இணைக்கப்பட்ட பிறகு வங்கித்துறையில்
பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஜூலை 1 ஆம் தேதி முதல் சில
வங்கிகளின் IFSC கோடுகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா வங்கி , ஓரியண்டல் வங்கி , அலகாபாத் வங்கி , சிண்டிகேட் வங்கி , யுனைடெட் வங்கி , கார்ப்பரேஷன் வங்கி இந்த 6 வங்கிகளின் IFSC கோடுகள் இயங்காது
ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு மீண்டும் அமல்
நியாய
விலைக் கடைகளுக்கு குடும்ப அட்டைதாரர்கள் வரும்போது ஏற்படும் கூட்ட
நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டும், தாமதமின்றி நிவாரணத் தொகை மற்றும்
தொகுப்புப் பையினையும் பெற்றுச் செல்ல ஏதுவாக கைவிரல் ரேகை பதிப்பின்
நடவடிக்கை நிறுத்தம் செய்யப்பட்டது. இன்று முதல் கைவிரல் ரேகைப்
பதிப்பினையும் மீள செயல்முறைப்படுத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது
வருமான வரி செலுத்துவோருக்கு புதிய வசதி
வருமான
வரித்துறையினரின் புதிய வசதி இது குறித்து எளிதில் இணையத்தில் கண்டறியும்
விதமாக புதிய வசதி ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் வருமான
வரித்துறை தெரிவித்துள்ளது.
இது
டிடிஎஸ் பிடித்தம் செய்வோருக்கும், டிசிஎஸ் வசூலிப்பவருக்கும் மிகப் பெரிய
உதவியாக இருக்கும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........