தமிழக முதல்வர் பிரதமரிடம் முன்வைத்த கோரிக்கைகள் என்ன! முழு விவரம்

 பிரதமர் மோடியுடனான சந்திப்பில் தமிழ்நாட்டின் நலன் சார்ந்த 30க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

தமிழக முதல்-அமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற முன்னர் முதல் முறையாக இன்று டெல்லி சென்றுள்ளார். 


தமிழ்நாட்டின் நலன் சார்ந்த 30க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.அந்த மனுவில்

தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும், 

முல்லை பெரியார் அணையின் நீர் 152 அடியாக உயர்த்தவேண்டும்,

குடியரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்ய வேண்டும், 

செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், 

திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், 

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், 

கச்சத்தீவை மீட்க வேண்டும், 

வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வேண்டும், 

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், 

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்க வேண்டும்,

மேகதாது திட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும், 

புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும்.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும்.

நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். 

புதிய மின்சார சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,

இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கே வழங்கவேண்டும்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும், 

கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும். 

ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் 

இப்படியாக மேலும் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது

பிரதமர் மோடியுடனான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு 25 நிமிடங்கள் வரை  நடைபெற்றது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை

https://drive.google.com/file/d/1ddPng1z_EYqeNnJHsxNwHhixzNlbejkd/view?usp=sharing

Post a Comment

0 Comments