கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களின் ஆக்சிஜன் அளவு 90 அல்லது 94-ஆக இருந்தால் அவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதியில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று சிகிச்சை முறை குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது.
அதன்படி
கொரோனா நோய் தொற்றால் ஒருவர் பாதிக்கப்படுகிறார் என்றால் அவர்கள் முதலில் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கொரோனா சிகிச்சை மையத்தை அணுகவேண்டும்.
ஆக்சிஜன் அளவு 90 அல்லது 94-ஆக இருப்பின் அவர்கள் மருத்துவர்களின் வழிகாட்டுதலின்படி மாத்திரைகள் எடுத்துக்கொண்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்.
ஆக்சிஜன் அளவு 90, 94 உள்ளவர்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கக்கூடாது.
கொரோனா நோய் தொற்றால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90-க்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே கரோனா மருத்துவமனைகளில் சிகிச்சை தர வேண்டும்.
அதாவது:
கொரோனா நோயாளிக்கு ஆக்சிஜன் அளவு 94 கீழே இருந்தால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க கூடாது. அவரகளை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆக்சிஜன் அளவு 90 - 94 உள்ளவர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கொரோனா மையங்களில் சிகிச்சை பெறலாம்.
ஆக்சிஜன் அளவு 90-க்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே அரசு மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........