கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் சவுதியில் உள்ளவர்களுக்கு மட்டுமே ஹஜ் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். குடிமக்கள் மட்டும் குடியிருப்பாளர்கள் 60 ஆயிரம் நபர்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் சுமார் 160 நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பது வழக்கம்.
இந்த ஆண்டு ஹஜ் புனித பயணம் ஜூலை மாதம் மத்தியில் தொடங்கவிருக்கிறது.
தற்போது
கோவிட் பெருந்தொற்று பரவலால், இந்த ஆண்டு உள்நாட்டினர் 60,000 பேர்
மட்டுமே ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.
இந்த முடிவை ஹஜ் அமைச்சகமும், உம்ராவும் இணைந்து எடுத்துள்ளன என அறிவித்துள்லது
மேலும் இந்த ஆண்டு ஹஜ் செய்யும் உள்நாட்டினர் 18 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
தடுப்பூசி 2 டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் அல்லது ஒரு டோஸ் எடுத்து 14 நாட்கள் முடிவடைந்த அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
அதேபோல் கோவிட் பாதிக்கப்பட்டு மீண்டவர்களும் அனுமதிக்கப்படுவார்கள் ..
ஹஜ் செய்வதற்கான முன்பதிவு ஆன்லைன் தளம் நாளை மதியம் 1 மணிக்கு ஓபன் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.
Source:
#BREAKING: Authorities in #SaudiArabia have decided to allow 60000 pilgrim of vaccinated citizens and residents who are already in the Kingdom to preform this year’s #Haj. #Hajj2021 pic.twitter.com/n9Mv6976bZ
— Saudi Gazette (@Saudi_Gazette) June 12, 2021


0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........