சமையல் எரிவாயு பயன்படுத்துவோர் தாங்கள் பதிவு செய்த விநியோகஸ்தர்களை தவிர மற்ற விநியோகஸ்தர்களிடமும் எரிவாயு பெற்றுக் கொள்ளும் வகையில் மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்த மத்திய அரசு அறிவிப்பில்
முன்னதாக தாங்கள் பதிவு செய்த எரிவாயு விநியோகஸ்தர்களிடம் இருந்து மட்டுமே கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்து பெற முடியும். ஆனால் இனி, வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் விநியோகஸ்தர்களிடம் இருந்து கேஸ் முன்பதிவு செய்து பெறுவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
நுகர்வோர் விரும்பும் எந்த சமையல் எரிவாயு முகவரிடமும் சேவையை மாற்றிக் கொள்ளும் வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்
தற்போது சோதனை முயற்ச்சியாக கோயம்புத்தூர், சண்டிகர், குர்கான், புனே மற்றும் ராஞ்சி ஆகிய நகரங்களில் முதலில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.
தாங்கள் சேவை பெறும் எண்ணெய் நிறுவனங்களின் இணையதளங்கள் மற்றும் கைபேசி செயலிகள் மூலம் நுகர்வோர்கள் இந்த சேவையை பெறலாம். இந்த இலவச வசதியின் மூலம், வீட்டிலிருந்தவாறே தங்களது சமையல் எரிவாயு விநியோகஸ்தரை நுகர்வோர்கள் மாற்றிக்கொள்ள முடியும்.
மத்திய அரசின் அறிவிப்பு
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725998

0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........