சிபிஎஸ்சி பொதுத்தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தங்கள் பதிலை இரண்டு நாட்களுக்குள் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இந்த வழக்கு நாளை மறுநாள் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சிபிஎஸ்சி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக கல்வித்துறை அமைச்சர்கள், கல்வித்துறைச் செயலாளர்கள் மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்
இந்த ஆலோசனைக்குப் பிறகு சிபிஎஸ்இ பிளஸ் -2 பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மேலும் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு மட்டும் பிறகு தேர்வு நடத்தப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கபட்டுள்ளது
மத்திய அரசின் அதிகாரபூர்வ அறிக்கை படிக்க
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........