தமிழகம் முழுவதும் இவர்களுக்கு இ-பதிவு தேவையில்லை; அடையாள அட்டை இருந்தால் போதும்

ஊடகவியலாளர்கள், மருத்துவத்துறையினர், வழக்கறிஞர்களுக்கு இ-பதிவுமுறை அவசியமில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. 
இந்நிலையில் மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்ட விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்தது.
மாவட்டங்களுக்கு இடையில் அத்தியாவசிய பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு, வேலைவாய்ப்பு போன்றவற்றுக்குப் பயணம் செய்ய இ-பதிவு செய்ய வேண்டும்.
இந்நிலையில் ஊடகத்துறையினர், மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர் உள்ளிட்டோருக்கு இ-பதிவு அவசியமில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஊடகத்துறையினர்,அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் அடையாள அட்டை காண்பித்தால் போதும் என்று காவல்துறை அறிவித்துள்ளது

Post a Comment

0 Comments