நாடு முழுவதும் மே 26-ம் தேதி நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் 6 மாதங்கள் நிறைவுபெறுவதை குறிக்கும் வகையில் மே 26-ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த சம்யுக்த கிஸான் மோர்ச்சா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
வேளாண் விளைபொருள்கள் வியாபார மற்றும் வா்த்தகச் சட்டம், வேளாண் விளைபொருள்கள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் மத்திய அரசு இயற்றியது. இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்பதால் அவற்றை ரத்து செய்ய வேண்டும் என பஞ்சாப், ஹரியாணா மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் இந்த போராட்டம் 6 மாதங்களை நிறைவுசெய்வதை குறிக்கும் வகையில் நாடு முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அழைப்புக்கு திமுக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சிவசேனை, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜம்மு-காஷ்மீா் தேசிய மாநாடு ஆகிய 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அந்தவகையில் ஆம் ஆத்மி கட்சியும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........