தனியார் ஆய்வகமான மெட் ஆல் நிறுவனத்தின் கொரோனா பரிசோதனை உரிமத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரபல தனியார் ஆய்வகமான மெட்ஆல் நிறுவனத்துக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
தமிழகத்தில் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா இருப்பதாக தவறாக பதிவு செய்து உள்ளதாக மெட் ஆல் நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது. கடந்த மே 19, மே 20 தேதிகளில் கொரோனா தொற்று இல்லாத 4,000 பேருக்கு தொற்று உறுதி என ஐசிஎம்ஆரில் தவறாக பதிவேற்றம் செய்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று மெட் ஆல் நிறுவனத்தின் கொரோனா பரிசோதனை உரிமத்தை ரத்து செய்து தமிழக நல்வாழ்வுத்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்குள் விளக்கம் தருமாறும் மெட் ஆல் நிறுவனத்துக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........