தில்லியில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.
கரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக தில்லியில் கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதியிலிருந்து முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஒவ்வொரு வாரமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் மே 24 (திங்கள்கிழமை) முடிவடைய இருந்த ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்படுவதாக முதல்வா் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
அதன்படி, மே 31 ஆம் தேதி (திங்கள்) காலை வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. முழு ஊரடங்கு காரணமாக தில்லியில் கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக முதல்வர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மே இறுதியில் கரோனா பரவல் எப்படி இருக்கிறது என்பதைப் பொருத்து அடுத்த மாதம் தளர்வுகள் அறிவிக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........