பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் சமூக வலைதளங்கள் இன்னும் 2 நாள்களில் முடக்கப்படுமா? உண்மை என்ன
கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி, இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அனைத்து சமூக நிறுவனங்களுக்கும் ,ஓ.டி.டி. தளங்கள் உட்பட புதிய விதிமுறைகளை பிறப்பித்து. அதன்படி
இந்தியாவில் செயல்பட இருக்கும் சமூகவலைதளங்கள் இந்தியாவை சேர்ந்த ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும். அவரின் இருப்பிடம் மற்றும் தகவல்களை அரசுக்கு வழங்க வேண்டும்.
இந்தியாவில் ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும்.
அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
அவர் சமூக வலைதளங்களில் வரும் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும்.
சர்ச்சைகுறிய கருத்துக்கள் மற்றும் உள்ளீடுகளை கண்காணித்தல், நீக்குதல் ஆகிய பணிகளை அவர் மேற்கொள்ளவேண்டும் என மத்திய அரசு அறிவித்தது
மேலும் அந்த விதிமுறைகளை பின்பற்ற மூன்று மாத கால அவகாசம் அளித்தது.விதிகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.
மத்திய அரசின் இந்த புதிய விதிகளுக்கு எந்தவித பதிலையும் பேஸ்புக் ,ட்விட்டர்,இன்ஸ்ட்ராகிராம் பதிலளிக்கவில்லை. எனவே புதிய விதிகளுக்கு இணங்காத சமூக ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்படுமா? அல்லது மத்திய அரசின் விதிமுறைகளை சமூக ஊடகங்கள் ஏற்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பிப்ரவரி 25 அன்று மத்திய அரசு அறிவித்த அறிவிப்பு
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........