பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா, & பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, திட்டத்தின் மூலம் கொரானா மரணங்களுக்கு ரூ.2 லட்சம் இன்சூரன்ஸ் பெறலாமா ?| உண்மை என்ன ?

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  

நெருங்கிய உறவினர்/நண்பர்கள் வட்டத்தில் யாரோ ஒருவர் கோவிட்-19 காரணமாக அல்லது வேறு ஏதோ காரணத்தினால் இறந்து விட்டால், நிதியாண்டின் 01-04 முதல் 31-03 வரை கணக்கு அறிக்கை அல்லது பாஸ்புக் என்ட்ரியை வங்கியிடம் கேளுங்கள். ரூ.12 /- அல்லது ரூ.330/- எனும் என்ட்ரியைக் கவனிக்கவும், அதை குறிக்கவும். வங்கிக்கு சென்று இன்சூரன்ஸ் தொகை ரூ.2,00,000 க்ளைம் செய்யுங்கள். 2015 ஆம் ஆண்டில், அனைத்து வங்கிகளின் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்திய அரசு இரண்டு இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்கியது: பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) ரூ.330 ஆகவும், பிரதான் மந்திரி சுரக்சா பீமா யோஜனா (PMSBY) ரூ.12 ஆகவும். 2 லட்சம் ரூபாய். நம்மில் பலர் இந்த படிவத்தை பூர்த்தி செய்திருக்கலாம். பிரீமியம் 31/05 அன்று அவர்களின் கணக்கிலிருந்து டெபிட் செய்யப்படும். இந்த செய்தியை அனைத்து வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் பரப்புங்கள். 

என்று  ஒரு செய்தியினைபலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என வழுத்தூர் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி வழுத்தூர் மீடியா களம் கண்டது


அந்த செய்தியின் உண்மை என்ன

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) : 

இந்திய அரசு சமுக நலன் கருதி பல்வேறு விதமான திட்டங்களை தன் குடிமக்களுக்கு வழங்கி வருகின்றது. அதில் ஒன்று தான் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம்.

  • இந்த திட்டத்தில் வெறும் 330 ரூபாய் பிரிமீயம் செலுத்தினால் போதுமானது. இந்த திட்டத்திற்கு தானாகவே விண்ணப்பிப்பவர்களின் சேமிப்பு வங்கி கணக்கில் இருந்து ரூ.330 டெபிட் செய்யப்படும். இதன் மூலம் 2 லட்சம் ரூபாய் க்ளைம் செய்து கொள்ள முடியும்.

  • இந்த திட்டத்தில் 18 வயது முதல் 50 வயதுள்ளவர்கள் எடுக்க முடியும். இந்த திட்டத்தினை வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் தான் எடுக்க முடியும்

  • இத்திட்டம் ஆண்டுதோறும் ஜூன் 1 முதல் மே 31 வரை ஒரு ஆண்டு காலத்திற்கு ரூ.2 லட்சம் கவர் வழங்குகிறது. 

  • எந்தவொரு காரணத்தினாலும் ஏற்படும் இறப்புகளுக்கு க்ளைம் செட்டில் செய்யப்படும் 

  • இதில், கோவிட்-18 இறப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன. 

  • 18-55 வயதுக்கு இடையில் வங்கி கணக்கு வைத்திருக்கும் யாரும் விண்ணப்பிக்கலாம்.

  • 55 வயதிற்கு மேற்பட்டவராக இருந்து கோவிட்-19 ஆல் இறந்தால் இந்த திட்டம் பயனளிக்காது. 

  • இந்த திட்டத்தின் கீழ் இழப்பீடு கோரும் மக்கள் தங்கள் க்ளைமை அந்தந்த வங்கிகளில் 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

இறப்பு சான்று, 

மருத்துவமனை ரசீது, 

போட்டோ, 

நாமினியின் வங்கிக் கணக்கு 

இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களது ஆவணங்களை சரிபார்த்து, 30 நாட்களுக்குள் உங்களுக்கு க்ளைம் செய்து கொடுக்கும். 


மேலும் விவரங்களுக்கு மத்திய அரசின் அறிப்பை படிக்க:

https://jansuraksha.gov.in/Files/PMJJBY/English/About-PMJJBY.pdf


பிரதான் மந்திரி சுரக்சா பீமா யோஜனா (PMSBY) : 

  • இது ஒரு டெர்ம் இன்ஸ்சுரன்ஸ் பாலிசி ஆகும். இது விபத்து காரணமாக ஏற்படும் இறப்பு அல்லது உடல் ஊனத்திற்கு எதிராக வழங்கப்படும் ஒரு காப்பீடு திட்டம் ஆகும். 

  • இந்தத் திட்டம் 18 முதல் 70 வயது வரை உள்ள தனிநபர்களுக்கு வழங்கப்படுகின்றது. 

  • இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் தனி நபர் இறப்பிற்கு ரூ 2 லட்சமும், உடல் ஊனத்திற்கு ரூ 1 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படுகின்றது.

  • காப்பிடு தொகை ரூ 12 ஆனது மே 31 ம் தேதிக்கு முன்னர், உங்கள் வங்கி கணக்கிலிருந்து தானாகவே காப்பீடு திட்டத்திற்கு செலுத்தப்படும். 

  • இந்த திட்டத்தின் கீழ் கோவிட்-19 உயிரிழப்புகள் விபத்து மரணங்களாக கருதப்படவில்லை. 

  • ஆகையால், இத்திட்டத்தின் கீழ் கோவிட்-19 இறப்புகளுக்கு இன்சூரன்ஸ் பெற முடியாது.


மேலும் விவரங்களுக்கு மத்திய அரசின் அறிப்பை படிக்க:

https://jansuraksha.gov.in/Files/PMSBY/English/About-PMSBY.pdf


வழுத்தூர் மீடியாவின் ஆதாரம்

 

Post a Comment

0 Comments