நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. அங்கு தினமும் 30,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வந்தன.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கேரளாவில் முழு ஊரடங்கு போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கேரளாவில் வருகிற 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு குறைந்ததால் திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூரில் மூன்றடுக்கு முறையில் போடப்பட்டு இருந்த கடும் கட்டுப்பாடுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மலப்புரத்தில் கடும் கட்டுப்பாடுகள் நீடிக்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார். கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29,673 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 142 பேர் உயிரிழந்துள்ளனர். 3,06,346 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........