சென்னையில் வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் வெளியே வந்தால் ரூ.2,000 அபராதம் !!சென்னை மாநகராட்சி எச்சரிக்கை... புகார் எண் இதோ...!

கொரோனா நோயாளிகள் தனிமையில் இருக்கும்போது வெளியே சுற்றித்திரிந்தால், ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளதாவது:

சென்னையில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட நோயாளிகள் வெளியே சுற்றித்திரிந்தால் அவர்களிடம் ரூ.2000 அபராதம் வசூலிக்கப்பட்டும். அத்துடன் அவர்களை கோவிட் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா பாதித்து வெளியே நடமாடுபவர் பற்றி 044 25384520 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments