துபாயில் பெருநாள் தொழுகை நடைபெறும் நேரம் மற்றும் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள்..!

துபாயில் கொரோனாவிற்கான அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் இந்த வருடத்திற்கான நோன்பு பெருநாள் தொழுகையானது நடைபெறும் என்று துபாயய்  அறிவித்துள்ளது.

இது குறித்து IACAD தெரிவிக்கையில், பெருநாள் தொழுகையானது துபாயில் அதிகாலை 5:52 மணிக்கு நடைபெறும் என்று IACAD கூறியுள்ளது. 

துபாய் முழுவதும் உள்ள ஈத் முசல்லாக்கள் (தொழுகை நடத்தப்படும் திடல்) பெருநாள் தொழுகை நடைபெறவிருக்கும் நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு திறக்கப்படும் மற்றும் தொழுகை முடிந்தவுடன் உடனடியாக மூடப்படும் என்று தெரிவித்துள்ளது. 

மேலும் மறு அறிவிப்பு வரும் வரை பெண்களுக்கான தொழுகை அறைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments