கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் பெயரில் வங்கிக் கணக்கு தொடரப்பட்டு 10 லட்சரூபாய் டெபாசிட் செய்யப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர். ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில்
ஆந்திர மாநில அரசு குழந்தைகளின் நலனுக்காக புதிய திட்டத்தை அறிவிக்கிறது. இதன்படி, கரோனாவில் பாதிக்கப்பட்டு தாய், தந்தையை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படும் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ஆந்திர அரசு சார்பில் ரூ.10 லட்சம் வங்கியில் வைப்புத் தொகையாகச் செலுத்தப்படும்.
இந்த தொகையின் மூலம்கிடைக்கும் வட்டியை குழந்தையை பராமரிக்கும், வளர்க்கும் பாதுகாவலர் எடுத்துக்கொண்டு, அந்த குழந்தையை கவனிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது
Source:
https://www.indiatoday.in/india/story/andhra-rs-10-lakh-fixed-deposit-for-children-orphaned-by-covid-1803498-2021-05-17
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........