ஆந்திராவில் தனியார் மருத்துவமனைகள் தொடங்குபவர்களுக்கு 5 ஏக்கர் நிலம் இலவசமாக அரசு சார்பாக வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநில பிரிவினைக்கு பிறகு ஆந்திராவிற்கு என்று சிறந்த மருத்துவமனைகள் எதுவும் இல்லாத காரணத்தினால் ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்ட தலைநகர் மற்றும் 3 மாநகராட்சிகளில் ஒவ்வொரு இடத்திலும் 30 முதல் 50 ஏக்கர் நிலம் ஒதிக்கீடு செய்யப்படவுள்ளது. ஆந்திராவில் முதலீடு செய்து மருத்துவமனை தொடங்க முன்வந்தால் 5 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்படும்" என்றும் தெரிவித்துள்ளார்.
SOURCE:
https://www.telugu360.com/16-health-hubs-in-ap-each-pvt-hospital-to-get-5-acres-jagan/
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........