மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.
மருத்துவக்குழுவுடனான ஆலோசனைக்கு பிறகு சட்டமன்றக் கட்சி உறுப்பினர்கள் குழுவுடனும் முதல்வர் ஆலோசனை செய்கிறார்.
இந்த கூட்டத்தில் வருகின்ற 24-ஆம் தேதி அதிகாலை 4 மணியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பதா..? அல்லது சில தளர்வுகள் கொடுப்பதா..? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிகின்றது.
அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தின் படி முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி குழு அமைப்பில் 13 கட்சிகளின் சார்பில் தலா ஒரு எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆலோசனை குழு கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து அவ்வப்போது கூடி ஆலோசிக்கும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு இன்றே வெளியாகும் என்றும், குறிப்பாக மேலும்ஒரு வாரம் அதாவது மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ள தாகவும் கூறப்படுகிறது.
கொரானா பரவலை கட்டுபடுத்த 13 பேர் கொண்ட ஆலோசனை குழு ஏற்படுத்தபட்டது
விஜயபாஸ்கர், அ.தி.மு.க.,
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........