கொரோனா தொற்றினை தற்போது ஆர்டிபிசிஆர் பரிசோதனை மூலம் கண்டறிந்து வருகின்றனர். அதாவது அறிகுறி இருப்பவரின் எச்சில், சளி மாதிரிகளை எடுத்து அதனை பரிசோதனைக்கு அனுப்பி தொற்று உறுதி செய்யப்படுகிறது.
கடந்த ஒரு வருடமாக பரிசோதனை நடைபெற்று வந்த நிலையில் மூன்று கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் இதன் உற்பத்தி, விற்பனைக்கு மற்றும் விநியோகத்திற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த கருவியின் மூலம் பரிசோதனை செய்வதற்கு 75 நிமிடங்கள் போதுமானது. அதே போல் வெறும் 75 ரூபாய் தான் செலவாகும்.
மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் வரும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது
முன்னதாக DRDO-வும், ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் நிறுவனமும் இணைந்து 2 DG என்ற பெயரில் பவுடர் வடிவிலான கொரோனா சிகிச்சைக்கான மருந்தை உருவாக்கி சாதனை படைத்தது.
இம்மருந்தை தண்ணீரில் கலக்கி குடிக்கும்போது குறைவான மற்றும் மிதமான தொற்று பாதிப்புள்ளவர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் கிடைப்பதாக கூறப்படுகிறது.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........