கொரோனா தொற்று பாதிப்பை வீட்டிலேயே கண்டறியும் பரிசோதனை கருவிக்கு ஐசிஎம்ஆர் அனுமதி.

கொரோனா இருப்பதை வீட்டிலேயே கண்டறியும்  ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட் கருவியின் பயன்பாட்டுக்கு இந்த கருவிக்கு பல்வேறு பரிசோதனைகளுக்கு பின்னர் இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது

இந்த புதிய கருவியை மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது.  மிகவும் எளிமையாக மூக்கில் உள்ள சளி மாதிரியை எடுத்து  தொற்று இருப்பதை வீட்டிலேயே உறுதி செய்யும் வகையில் இக்கருவி உருவாக்கப்பட்டுள்ளது. 

ஒரு பரிசோதனை கருவியின் விலை ரூ.250 ஆகும் 15 நிமிடங்களுக்குள் பரிசோதனை முடிவுகளை தெரிந்துகொள்ள முடியும்.

ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட்கருவி விரைவில் மக்கள்  பயன்பாட்டுக்கு வரும்  என எதிர்பார்க்கபடுகின்றது

Post a Comment

0 Comments