அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 6 கோடி மோசடி செய்து விட்டதாக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கபீல். இவர் வாணியம்பாடி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
நடந்து சட்டபேரவை தேர்தலில் நிலோபர் கபீலுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபிலின் உதவியாளர் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஆம்பூர் பேட்டையைச் சேர்ந்த பிரகாசம் என்பவர்,ஆன்லைன் மூலமாக சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில் நான் அ.தி.மு.க.வில் நிரந்தர உறுப்பினராக உள்ளேன்.நான் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்கிறேன்.நிலோபர் கபில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த போது,அவருக்கு உதவியாளராகவும் பணியாற்றி உள்ளேன். அதுமட்டுமல்லாமல்,அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக நிலோபர் கபீல் கூறினார் என்று பல பேர், காசோலை வாயிலாக என்னிடம் பணம் கொடுத்தனர்.மொத்தமாக ரூ.6 கோடி அளவுக்கு பணம் என்னிடம் கொடுக்கப்பட்டது.
அதன்பின்னர்,அந்த பணத்தை உடனே நிலோபர் கபீலின் வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டேன்.ஆனால்,பணத்தை கொடுத்தவர்கள் சொன்னபடி வேலை வாங்கி தரவில்லையென்று,கொடுத்த பணத்தை என்னிடம் திருப்பிக் கேட்டு,எனது வீட்டிற்கு வந்து மிரட்டுகிறார்கள்.
எனவே, நிலோபர் கபீலின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்",என்று புகார் அளித்துள்ளார்
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........