23 ம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு என இந்திய வானிலை மையம் அறிவிப்பு..!

வங்கக்கடலில் வரும் 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் டவ்தே புயல் உருவாகி பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில் அடுத்து வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு எனவும் மே 23ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 5 நாளில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments