BREAKING NEWS ; ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்

BREAKING  தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் இரவு 10 மணி  முதல் அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல்!
 
மே 5-ம் தேதி தொடங்கவிருந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு. தேதி பின்னர் அறிவிக்கப்படும். செய்முறைத் தேர்வுகள் தொடர்ந்து நடைபெறும்.

தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் 50 சதவிகிதம் பேர் வீட்டிலிருந்தே பணிபுரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும்

சுற்றுலா தலங்களுக்கு உள்ளூர் &  வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாடுகளுக்கும் தடை

அனைத்து கடற்கரை பகுதிகளுக்கும் அனைத்து நாட்களும் பொதுமக்கள் செல்ல தடை
கல்லூரி & பல்கலைக் கழக தேர்வுகள் இணைய வழியில் மட்டுமே நடத்தப்பட வேண்டும்

கல்லூரி &  பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணையவழி வகுப்பு நடத்த அறிவுறுத்தல்

விதிமுறைகளை பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும்
 
இரவு நேர ஊரடங்கின் போது தனியார் / பொது போக்குவரத்து & ஆட்டோ &  டாக்ஸி அனுமதி இல்லை

 மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ & டாக்ஸி போன்றவை அனுமதிக்கப்படும்

அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் ஆலைகள் இரவு நேர ஊரடங்கின் போது செயல்பட அனுமதி

தனியார் நிறுவன இரவு காவல் பணியில் ஈடுபடுவோர் வீட்டிலிருந்து பணி இடத்திற்கு சென்று திரும்ப அனுமதி

பெட்ரோல் & டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி*

இரவு ஊரடங்கு அமலாகும் 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்துகள் ஓடாது
 
ரயில் & விமான நிலையங்களுக்கு டாக்ஸி அனுமதிக்கப்படும் என்பதால் ரயில் & விமானங்கள் வழக்கம்போல இயங்கும்

திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு 100 பேரும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேரும் பங்கேற்க அனுமதி

நீலகிரி ,  கொடைக்கானல் , ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு உள்ளூர் &  வெளியூர் பயணிகள் செல்ல தடை

பூங்கா & உயிரியல் பூங்கா & அருங்காட்சியகங்கள் அனைத்து நாட்களிலும் செயல்பட அனுமதி இல்லை

முழு ஊரடங்கு , ஞாயிற்றுக்கிழமைகளில் உணவகங்களில் பார்சல்கள் மட்டுமே அனுமதி

தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை மறுநாள் (செவ்வாய்) காலை முதல் அமுலாகின்றன
 
தமிழக அரசின் அதிகாரபூர்வ அறிக்கையை படிக்க:
https://drive.google.com/file/d/1A9LUF1F45Q2Kyj7sFCtCPncckK9sQI29/view?usp=sharing

Post a Comment

0 Comments