எதிர்வரும் வெள்ளிகிழமை அன்று பள்ளிவாசலில் ஜும்மா தொழுகை நடத்த தமிழக அரசுக்கு ஜமா அத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது
TO.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்
தலைமைச் செயலகம்
சென்னை
தமிழ்நாடு
கொரொனா இரண்டாம் அலை தீவிரப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பெரும் முயற்சி செய் வருவதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 30 ஆம் தேதி வரை வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் பங்கேற்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் வீட்டிலேயே தொழுது கொள்ள வேண்டும் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
இருப்பினும் புனிதம் நிறைந்த ரமழான் மாதத்தின் சிறப்பு வழிபாடுகளை கூட்டாக நிறைவேற்றுவது இஸ்லாத்தின் முக்கிய அம்சமாகும். மேலும் இது போன்ற பேரழிவுக் காலங்களில் ஆன்மிக உணர்வும் இறைத் தொடர்பும் மக்களுக்கு பெருமளவு ஆசுவாசமும் ஆறுதலும் தரும் என்பதால் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையிலிருந்து பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளிட்டுள்ள அறிவுரைகளை மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் கடைபிடிக்கும்படி மக்களை நாங்கள் வலியுறுத்துகிறோம். அரசுடன் இணைந்து நோய்த்தொற்றை வீழ்த்திட பணியாற்றுகிறோம். என ஜமா அத்துல் உலமா சபை தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........