வழுத்தூர் ஊராட்சி மன்றத்திற்க்கு ஆரம்ப சுகாதர நிலையம் வேண்டி வழுத்தூர் இளைஞர்கள் சார்பாக ஊராட்சி மன்ற தலைவர், துனைத்தலைவர் & ஒன்றிய கவுன்சிலரிடம் இன்று (01-12-2020) மனு அளிக்கப்பட்டது..!
தஞ்சை - கும்பகோணம் சாலையில் சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் மேலவழுத்தூர் எனும் கிராமத்தில் நாங்கள் வசித்து வருகிறோம், எங்கள் ஊரில் சுமார் 2000கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. வழுத்தூர் ஊராட்சி மக்களின் அடிப்படை தேவையான "ஆரம்ப சுகாதார மையம்" இல்லாமல் பல வருடங்களாக தவித்து வருகிறார்கள், சில நேரங்களில் சாலையில் ஏற்படும் விபத்துக்களில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்வதற்கு கூட 4 அல்லது 5 கிலோ மீட்டர் செல்ல வேண்டிய அவல நிலை தொடர்ந்து நிலவி வருகிறது. இந்நிலையை மாற்றிட உடனடியாக அரசு சார்பில் ஆரம்ப சுகாதர மையம் அமைத்து தர ஆவனம் செய்ய உத்தரவிடுமாறு மிக்க பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்ற செய்தி அடங்கிய மனுவினை வழுத்தூர் இளைஞர்கள் ஊராட்சி மன்ற தலைவர், துனைத்தலைவர் & ஒன்றிய கவுன்சிலரிடம் மனு அளித்தனார்._
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........