ஈகை திருநாளாம் பக்ரீத்தில் இறைவனின் திருப்பொருத்தத்தை மட்டும் நாடி நீங்கள் கொடுக்கும் குர்பானியை சமூக வலைதளங்களில் நீங்கள் படம் பிடித்து பதிவிடுவதை தவீர்க்கலாமே..!
நாம் பன்முகம் கொண்ட சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம். சமாதனத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் நாம் இப்படிபட்ட(குர்பானி அறுக்கும்) படங்களை பகிர்வதின் மூலம் மாற்றுமத நண்பர்களுக்கு மத்தியில் நமது சத்திய மார்க்கத்தை பற்றி தவறான கண்ணோட்டத்தை “உரூவக” படுத்த நாமே காரணம் ஆகிறோம் என்பதை உணரவில்லையா.....?
குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்;
(அல்குர்-ஆன் 22:37.)
(அல்குர்-ஆன் 22:37.)
என இறைவனே கூறிய பிறகு நமது பயபக்தியை சமூக வலைத்தளத்தில் நாமே விளம்பரம் செய்யலாமா..?
இன்ஷா அல்லாஹ் இந்த வருடமாவது நாம் குர்பானிக்காக அறுக்கும் விலங்குகளின் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தவீர்ப்போம்...!
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........