ஃபித்ரா_தொகை_அறிவிப்பு...!

அன்புள்ளம் கொண்ட சகோதர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகத்தஹு ....
நமது ஜமாத்தின் சார்பில் இந்த ஆண்டு ஏழைகளுக்கான ஃ பித்ரா தொகை ரூபாய் 85 என நிர்ணயக்கப்பட்டுள்ளது....எனவே சகோதர்கள் தங்களது ஃ பித்ரா தொகையை ஊர் அருகில் இருக்கும் எழை எளிய மக்களுக்கு கூடுத்து உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.....
ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

*முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள். மக்கள் தொழுகைக்குப் புறப்படுவதற்கு முன்னர் அதை வழங்கிட வேண்டும் எனவும் கட்டளையிட்டார்கள்.*
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1503
இந்த வருட (2020) ஃபித்ரா தொகை ரூ.85 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments