*அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி,வழுத்தூர், பசுபதிகோவில், மாங்குடி மற்றும் சுற்று கிராமங்களிலுள்ள அனைவருக்கும் ஒரு அரிய செய்தி.*

அய்யம்பேட்டை தேர்வுநிலை பேரூராட்சி யில்,

மண்புழு, உரம் இயற்கை உரம்
இரண்டும் மிக குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

நம் அய்யம்பேட்டை தேர்வுநிலை பேரூராட்சியில், நமது ஊரில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து,அதிலிருந்து உருவாக்கப்பட்ட மண்புழு உரம், இயற்கை உரம் சொந்தமாக தயாரித்து விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். மிக குறைந்த விலையில் விற்கிறார்கள். அந்த உரத்தை நம் வீட்டில் அனைத்துவித செடி, கொடி மற்றும் மரம் அனைத்துக்கும் உபயோகப்படுத்தலாம். நீங்கள் அந்த உரத்தை வாங்கினால் உங்களுக்கும் பயனாக இருக்கும். அவர்களுக்கு ஊக்கமாக இருக்கும்,அதனால் அவர்களுக்கு, மன்னிக்கவும் நம்மூருக்கு ஊக்கமளிக்கும் படியாகும் உறுதுணையாக இருக்கும் படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இரசாயனம் கலந்த செயற்கை உரங்களை தவிர்த்து,

இயற்கை உரங்களை பயன்படுத்தி,ஆரோக்கியமாக வாழ்வதோடு, சுற்றுச் சூழலையும் பாதுகாக்க அன்போடு அழைக்கிறோம்....

இப்படிக்கு
சமூக ஆர்வலர்கள் மற்றும்
நம் கடமை.

Post a Comment

0 Comments