நேற்றிரவிலிருந்தே கண்ணில் ஏதோ பயங்கர வலி. வலியோடுதான் காலையில் செய்தி வாசித்தேன். கிடைத்த இடைவெளியில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கண் மருத்துவமனைக்கு போனேன். சென்றுவிட்டு வந்தபின் வலி குறித்து அலுவலக நண்பர்கள் விசாரித்தார்கள்.. அப்போது நான் சொன்ன விஷயம் பலருக்கும் ஆச்சரியமாக இருந்ததை கவனித்தேன். சிகிச்சையும் அது சார்ந்த பொருட்களும் அங்கு இலவசம் என்பதுதான் அது. அப்போதுதான் இதனை எழுத தோன்றியது.
உள்ளே அமைந்துள்ள வெற்றிச்செல்வி அன்பழகன் கண் மருத்துவமனையில் ஸ்கேன், அறுவை சிகிச்சை, மருந்து, மாத்திரை உட்பட அனைத்தும் இலவசம். கன்சல்டிங் எனக்கு திருப்திகரமானதாக இருந்தது. வழக்கமான கண் மருத்துவமனைகளில் இருக்கிற கூட்டத்தை விட குறைவான கூட்டம்தான். இதை பற்றி பெரிதாக தெரியாததுதான் காரணமாக இருக்க கூடும். காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்படுகிறது.. தேவைப்படுவர்களுக்கு இதனை பகிரவும்!
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........