தஞ்சை: தஞ்சை பழைய பஸ் நிலையத்தை இடித்து விட்டு அங்க ரூ.13.85 கோடியில் நவீன பஸ் நிலையம் உருவாக்கப்பட உள்ளது. தஞ்நை நகரின் மையப்பகுதியில் 1945ல் பஸ் நிலையம் உருவாக்கப்பட்டது. மக்கள் தொகை, வாகன பெருக்கம் காரணமாக 1995ல் தஞ்சையில் புதிய பஸ் நிலையம் உருவாக்கப்பட்டது. பழைய பஸ்நிலையம் இன்று வரை டவுன் பஸ் நிலையமாக செயல்பட்டு வருகிறது. தற்போது தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல புதிய கட்டுமான பணிகள், நவீன வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பழைய நிலையத்தை இடித்து தரைமட்டமாக்கி விட்டு அந்த பஸ் நிலையத்தில் புதிதாக நவீன தொழில் நுட்பத்தில் ப1் நிலையம் ஏற்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ13.85 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இன்னும் 10 நாளில் தற்போதைய பழைய பஸ் நிலையம் திருவையாறு செல்லும் வழியில் உள்ள வாண்டையார் மைதானத்திற்கு மாற்றப்படும்.
புதிதாக உருவாக்கப்படும் பஸ் நிலையம் 7,186 சதுர மீட்டர் பரப்பில் அமையும். இங்கு 48 கடைகள், 437 டூவீலர்கள், 58 கார்கள் நிறுத்துவதற்கான இட வசதியும் செய்யப்படும். பஸ்நிலையத்தின் மேற் கூரையில் சோலார் பேனல்கள் அமைக்கப்படும். லிப்ட் வசதியும் செய்யப்படும். பயணிகள் வசதிக்காக உணவு விடுதி, குடிநீர், கழிவறை வசதி், தங்கும் விடுதி, டிடிசிவி கேமரா, ஸ்மார்ட் சிக்னல் போன்றவை அமைக்கப்பட உள்ளது. இதையொட்டி தஞ்சை பழைய பஸ்நிலையத்தை நேற்று கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார். அவருடன் எஸ்.பி. மகேஸ்வரன், மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவிச்சந்திரன் ஆகியோரும் வந்திருந்தனர். தற்காலிகமாக வாண்டையார் மைதானத்தில் அமைய உள்ள பஸ் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்துகொடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்....

0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........