வழுத்தூர் உமர் தெரு ஹவ்வா பள்ளிவாசல் கட்டிட விரிவாக்க திறப்பு விழா நிகழ்வு இனிதே நிறைவுற்றது..!

 *மேல வழுத்தூர் ஹவ்வா பள்ளிவாசலின் கட்டிட விரிவாக்க திறப்பு விழா ஜமாலியாத்தெரு மர்ஹும் ஹாஜி ராஜ் முஹம்மது அவர்களின் நினைவாக இளம் கொடையாளர் ஹாஜி E.R முஹம்மது பிர்தெளஸி B.E அவர்கள் கட்டிடம் கட்டி கொடுத்து வக்ஃப் செய்து கொடுக்கப்பட்டது.
வல்ல ரஹ்மான் அவர்களுக்கு மேலும் பரகத் செய்து, மேலும் இது போன்ற நல்ல அமல்களை செய்ய துஆ செய்கிறோம்.
*இந்த விழாவிற்கு வெள்ளம்ஜி ஜமால் - தாவூத் பேகம் அறக்கட்டளையின் நிர்வாகி எம் ஜே அப்துல் ரவூப் அவர்கள் தலைமை வகித்தார். புரொபசர் பசீர் அகம்மது M.Com, P.hd, அவர்கள் அனைவரையும் வரவேற்றார். தோஷிபா கம்பெனியின் மேலாண்மை இயக்குனர், அறிவியல் அறிஞர் டாக்டர் வெள்ளம்ஜி எம் ஜே முஹம்மது இக்பால் அவர்கள் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள்.
*வழுத்தூரின் முதல் பெண் நீதியரசர் மாண்புமிகு B. ரிஸ்வானா பர்வீன் அவர்களையும், வழுத்தூரின் முதல் அரசு மருத்துவர் டாக்டர் M.S முஹம்மது முபாரக் அவர்களையும், கண்ணியத்திற்குறிய அல்ஹாஜ் அரச்சலை குலாம் மைதீன் அவர்களால் நினைவு பரிசு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

*மேலும் ஹவ்வா பள்ளிவாசலின் தலைவரும், முன்னாள் கிராம நிர்வாக அதிகாரியுமான முகைதீன் அப்துல் காதர் அவர்களின் சேவையை பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருதும், பொற்கிழியும், வெள்ளம்ஜி ஜமால் தாவுது பேகம் அறக்கட்டளை சார்பாக, டாக்டர் எம் ஜே முஹம்மது இக்பால் அவர்கள் வழங்கினார்.
*இந்த நிகழ்வில் கண்ணியத்திற்குறிய அரச்சலை ஹாஜி குலாம் மைதீன் அவர்கள் கட்டிட விரிவாக்கம் பகுதியை சிறந்த முறையில் குறித்த காலத்தில் கட்டி தந்த பொறியாளர் முஹம்மது நியாஸ் அவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி கௌரவபடுத்தினார்கள்.
*இந்த நிகழ்ச்சியை அலிஃப் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் கல்விச்செம்மல் ஹாஜி ஏ.பஷீர் அஹமது அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார். விழா இறுதியாக ஹாஜி AMS முஹம்மது சித்திக் அவர்கள் விழாவினை சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறினார். இதில் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஏ. முஜிபுர் ரஹ்மான், இப்ராஹிம் மற்றும் ஹவ்வா பள்ளி நிர்வாகிகள் செய்திருந்தனர்.















Post a Comment

0 Comments