என்ன செய்தார் எங்க எம் எல் ஏ :

 பாபநாசம் தொகுதி : துரைக்கண்ணு (அதிமுக)

வாக்குறுதிகள் என்ன ஆச்சு?

தேர்தலின் போது பாபநாசத்தில் கலை, அறிவியல் கல்லூரி கொண்டு வருவேன், பாலிடெக்னிக் கொண்டு வருவேன், விவசாயக் கல்லூரி கொண்டு வருவேன், ஐ.டி.ஐ கொண்டு வருவேன் என்று ஆசை வார்த்தை காட்டினார். காவிரியில் அண்டக்குடி- சுந்தரப் பெருமாள் கோயில் இணைப்பு பாலம் கொண்டு வருவேன் என்றெல்லாம் அள்ளி விட்டார். ஆனால் இதற்கெல்லாம் 5 ஆண்டுகளாக ஒரு சிறு துரும்பை கூட அசைக்க வில்லை. -

மாநிலம் முழுக்க குளங்கள் தூர் வாரி சீரமைக்க மக்கள் பிரதிநிதிகள் முயற்சி எடுக்கும் நிலையில் இந்த ஊராட்சியில் உள்ள பரந்து விரிந்த தேவரடியார் குளம் கடந்த சில ஆண்டுகளாக ஊராட்சி குப்பைகளை கொட்டி தூர்க்கப்பட்டு விட்டதை இவர் கண்டு கொள்ளவேயில்லை. இங்குள்ள மாதா கோயில் குளத்திற்கும் இதே கதிதான். இது போல ராஜகிரி, பண்டாரவாடையில் பல குளங்கள் காணாமல் போய்விட்டதாக அப்பகுதி மக்கள் கூக்குரலிடுவது அவர் காதில் கடைசி வரை விழவே இல்லை. தேவராயன் பேட்டை கோயில் குளம், சக்கராப் பள்ளி சக்கர வாகீசர் குளம் என பாபநாசம் ஒன்றியத்தில் உள்ள எந்த குளமும் தூர் வாரப்படாமல் மண் மேடாக மாறி வருகின்றன. பாபநாசத்தில் ஓடும் பாசன வாய்க்காலான அன்னுக்குடி வாய்க்கால் சிறிய பராமரிப்பு கூட செய்யாததால் சாக்கடையாகவே மாறி விட்டது.


* பாபநாசம் அரசு மருத்துவமனையின் முன்புறம் இருந்த புறநோயாளிகள் கட்டிடம் இடிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிறது. இதை கட்ட எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

* இந்த மருத்துவமனையின் வார்டுகளில் மழை பெய்தால் நீர் ஒழுகி நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

* மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்த தொகுதியில் உள்ள இந்த மருத்துவமனையில் இதய மருத்துவரோ, எலும்பு மருத்துவரோ கிடையாது. முதலுதவி சிகிச்சைக்கு பின் தஞ்சாவூர் அல்லது கும்பகோணம் அனுப்புவதும் மருத்துவமனை போய் சேருவதற்குள் பலர் இறந்து விடுவதும் வாடிக்கையாகி விட்டது.

* அய்யம்பேட்டையிலிருந்து கணபதி அக்ரஹாரம் செல்லும் குடமுருட்டி காவிரி பாலம் பழுதடைந்த நிலையில் பல ஆண்டுகளாக இருந்தாலும் புதிதாக கட்டித் தர கூட எந்த முயற்சியும் எடுக்க வில்லை. இளங்கார்குடி- மேட்டுத் தெரு காவிரி ஆற்றில் பாலம் கொண்டு வரவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

* பாபநாசத்திற்கு கடந்த 3 ஆண்டுக்கு முன் அறிவிக்கப்பட்ட 110 கிலோ வாட் துணை மின் நிலையம் நிதி ஒதுக்கியும் ஏனோ செயல்பாட்டுக்கு வரவில்லை.

* பழைய கட்டடத்தில் இயங்கும் பாபநாசம் கோர்ட்டுக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்பது அனைத்து தரப்பு வக்கீல்களின் எதிர்ப்பார்ப்பாக இருப்பது தெரிந்தும் எம்எல்ஏ எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

* பாபநாசத்தை சுற்றுலா நகரமாக அறிவித்து தனி வருவாய் கோட்டமாக பிரிக்க வேண்டும். போக்குவரத்து கழக பணி மனை அமைக்க வேண்டும்.

இதை எல்லாம்செய்யாமல் இவர் செய்த
5 ஆண்டு காலத்தில் ஒரே சாதனை பாபநாசம் ஒன்றியத்தில் பயணியர் பேருந்து நிழற்குடைகளை கட்டியது -

Post a Comment

0 Comments